அடப்பாவமே…! வீட்டில் கிடந்த சடலம்…. யாராவது ஆதாரம் வச்சிருக்கீங்களா…? வேட்டையில் இறங்கிய போலீஸ்…!!

கனடாவில் ஹாலிபக்ஸில் என்னும் பகுதி உள்ளது. இந்த பகுதியிலுள்ள வீடு ஒன்றில் கடந்த 2 தினங்களுக்கு முன்பாக Vincent Lamont Beals என்னும் 47 வயது மதிப்புடைய நபர் இறந்து கிடந்துள்ளார். இது தொடர்பாக காவல்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறை அதிகாரிகள் Vincent Lamont Beals உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார்கள். இந்த பிரேத பரிசோதனையின் முடிவில் Vincent Lamont Beals ஐ எவரோ கொலை செய்துள்ளார்கள் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

இதனையடுத்து காவல்துறை அதிகாரிகள் இந்த கொலை சம்பவம் தொடர்புடைய தகவல்கள் ஏதேனும் தெரிந்தால் தங்களிடம் வந்து பொதுமக்கள் தெரிவிக்குமாறு கூறியுள்ளார்கள்.