நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தின் பணிகள் வழமைக்கு திரும்பும் வரையில், எதிர்வரும் 4 நாட்களுக்கு நாட்டின் சில பாகங்களில் ஒரு மணிநேர மின்சாரத் தடை ஏற்படவுள்ளதாக மின்சக்தி அமைச்சு அறிவித்துள்ளது.
இதன்படி, மாலை 6 மணி முதல் இரவு 9.30 வரையில் நாட்டின் சில பாகங்களில், ஒரு மணிநேர மின்தடை அமுலாக்கப்படவுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
மின்சக்தி அமைச்சின் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
நாடுமுழுவதும் நேற்று(03) இடம்பெற்ற மின்சாரத் தடையுடன், நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தின், இரண்டு மின்னுற்பத்தி இயந்திரங்களில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று இடம்பெற்ற மின்சாரத் தடை தொடர்பில், இலங்கை மின்சார சபையின் ஊடாக விசேட விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.