இந்த ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட 5 நபர்கள்.. 2வது இடத்தைப் பிடித்த ஷாருக்கான் மகன்

ஒவ்வொரு ஆண்டும் கூகுளில் அதிகம் தேடப்பட்ட நபர்களின் பட்டியல் வெளியாகும். கூகுளில் அதிகம் தேடப்பட்ட நபர்கள் சாதனை செய்தவர்களாகவும் இருக்கலாம், சர்ச்சைகளுக்கு உள்ளானவர்கள் ஆகவும் இருக்கலாம். அந்த வகையில் 2021ல் அதிகம் தேடப்பட்ட ஐந்து நபர்களை பார்க்கலாம்.

நீரஜ் சோப்ரா: டோக்கியோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் தடகளத்தில் ஈட்டி எறிதல் பிரிவில் இந்திய வீரர்வீரர் நீரஜ் சோப்ரா முதல் முயற்சியிலேயே 87 மீட்டர் தொலைவுக்கு ஈட்டி முனையைச் செலுத்தினார். பின்பு, இரண்டாவது முயற்சியில் அதைவிடக் கூடுதலாக 87.58 மீட்டர் தொலைவுக்கு ஈட்டியை எறிந்து தங்கப் பதக்கம் வென்றார். ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதல் பிரிவில் அபினவ் பிந்த்ரா தங்கம் வென்றார். அதற்குப்பின் ஈட்டி எறிதல் பிரிவில் தங்கம் வென்று இரண்டாவது இந்தியர் என்ற பெருமையை நீரஜ் சோப்ரா பெற்றார். இதனால் கூகுளில் அதிகம் தேடப்பட்ட நபர்களில் இவர் பெயர் முதல் இடத்தை பிடித்துள்ளது.

ஆரியன் கான்: பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆரியன் கான். மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் சொகுசு கப்பலில் நடந்த போதைப் பொருள் விருந்து தொடர்பாக ஆரியன் கான் சிறையில் அடைக்கப்பட்டார். அதன்பிறகு ஆரியனுக்கு மும்பை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் வழங்கப்பட்டது. பிரபல பாலிவுட் நடிகரின் மகன் போதைப்பொருளை ஈடுபட்டதால் ஆரியன் கான் பெயர் கூகுளில் அதிகம் தேடப்பட்டது.

ஷானாஸ் கவுர் கில்: பஞ்சாபின் கத்ரீனா கைஃப் என்று அழைக்கப்படுபவர் ஷானாஸ் கில்.
பிக் பாஸ் 13 வெற்றியாளரான சித்தார்த் சுக்லா மறைந்ததில் இருந்து ஷானாஸ் கில் அதிர்ச்சியில் இருந்தார். சித்தார்த்தின் மறைவு அவரது நெருங்கிய தோழியான ஷானாஸ் கில் முழுவதுமாக உடைந்து போனார், பல நாட்களாக அவர் வீட்டிற்கு வெளியே பொது இடத்தில் எங்கும் காணப்படவில்லை. அதன்பிறகு சித்தார்த்தின் தற்கொலை தொடர்பாக நடிகை ஷானாஸ் அதிகம் தேடப்படும் நபர்களில் கூகுளில் மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.

ராஜ் குந்த்ரா: பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா ஆபாச வீடியோ எடுத்து மொபைல் ஆப்களில் வெளியிட்டு கோடிக்கணக்கணக்கில் சம்பாதித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதில் ராஜ் குந்த்ரா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனால் கூகுளில் அதிகம் தேடப்பட்ட நபர்களில் ராஜ்குந்த்ரா நான்காவது இடத்தை பிடித்துள்ளார்.

எலோன் மஸ்க்: ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா மோட்டார்ஸ் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் தலைமை செயல் நிறுவனரான எலோன் மஸ்க், இந்த ஆண்டின் தலைசிறந்த நபர் என அமெரிக்காவை சேர்ந்த டைம் இதழ் அறிவித்துள்ளது. இவர் தற்போதைய நிலையில் சுமார் 20 லட்சம் கோடி ரூபாய் சொத்துக்களுடன் உலக பணக்காரர்களின் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார்.

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad

எமது முகநூல் பக்கத்தினை லைக் செய்து உங்கள் ஆதரவை தாருங்கள்.