இந்த ஆண்டு போதைப்பொருள் வழக்கில் சிக்கிய 5 பிரபலங்கள்.. கார்த்திக் பட நடிகை இருக்காங்களே

 

சமீபகாலமாக போதைபொருள் வழக்குகளில் பல பிரபலங்கள் விசாரணைக்கு அழைக்கப்பட்டனர். பாலிவுட்டில் போதைப்பொருள் வழக்கு ஒரு புதிய விஷயம் அல்ல. இந்த ஆண்டு போதைப்பொருள் வழக்கில் மாட்டி விசாரணைக்கு அழைத்து சென்ற பிரபலங்களை பார்க்கலாம்.

இந்த போதைப்பொருள் கடத்தல் ஜூலை 2017 இல் அம்பலமானது. போதைப்பொருள் கடத்தல் தொடர்பான பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. போதைப்பொருள் கடத்தல் வழக்கில் 20 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

இந்த மோசடி தொடர்பாக கைது செய்யப்பட்ட நபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சில டோலிவுட் பிரபலங்களின் பெயர்கள் வெளியானது. இந்த ஆண்டு ஆகஸ்ட் 31 முதல் பிரபல திரைப்பட இயக்குனர் பூரி ஜெகநாத், நடிகைகள் சார்மி கவுர், ரகுல் ப்ரீத் சிங், நடிகர்கள் நந்து, ராணா நவ்தீப் மற்றும் ரவி டேஜா ஆகியோர் அமலாக்கத் துறையின் ஆஜராகினர்கள்.

போதை மருந்து விற்பனை செய்ததாக கைது செய்யப்பட்ட, கெல்வினிடம் கலால் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியபோது, அவரது செல்போனில் இருந்து தெலுங்கு திரைப்பட நடிகர், நடிகைகள், சிலரது எண்களை கைப்பற்றினர். அதன் அடிப்படையில் இவர்களுக்கெல்லாம் போதை மருந்து சப்ளை செய்தார்களா என்பது குறித்து பல்வேறு விசாரணைகள் நடத்தப்பட்டது.

நடிகர் கார்த்திக் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான தீரன் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பரட்சியமானவர் நடிகை ராகுல் ப்ரீத் சிங். போதைப்பொருள் வழக்கில் இவரும் ஈடுபட்டிருந்தது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆரியன் கான் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் சொகுசு கப்பலில் நடந்த போதைப் பொருள் விருந்து தொடர்பாக ஆரியன் கான் சிறையில் அடைக்கப்பட்டார். அதன்பிறகு ஆரியனுக்கு மும்பை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் வழங்கப்பட்டது. இச்செய்தி பாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad