வசனங்களால் சோசியல் மீடியாவை தெறிக்கவிட்ட அஜித் .. வலிமை டிரைலர் விமர்சனம்

 

ரசிகர்களின் பல வருட காத்திருப்புக்கு பிறகு பலத்த எதிர்பார்ப்புடன் வெளியாகியிருக்கிறது அஜித்குமாரின் வலிமை பட ட்ரெய்லர். போனி கபூர் தயாரிப்பில் வினோத் இயக்கியிருக்கும் இந்தப் படத்திற்காக அஜித்தின் ரசிகர்கள் ஒரு வருடத்திற்கும் மேலாக காத்திருந்தார்கள்.

அப்படி ரசிகர்கள் எதிர்பார்த்தது போலவே வலிமை படத்தின் டிரைலர் ஆக்ஷன் கலந்த த்ரில்லராக வெளியாகியுள்ளது. டிரைலரின் ஆரம்பமே அனல் தெறிக்கிறது. அதிலும் அஜீத்தின் பைக் சாகச காட்சிகள் ஒவ்வொன்றும் ரசிகர்களுக்கு நிச்சயம் விருந்தாக அமையும்.

ட்ரைலர் ஆரம்பித்ததில் இருந்து முடியும் வரை பின்னணியில் கேட்கும் யுவன் சங்கர் ராஜாவின் இசை மிரட்டலாக இருக்கிறது. இதுவே படத்திற்கு மிகப்பெரிய பலத்தை கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை. ட்ரைலரில் ஆக்ஷன் காட்சிகள் எவ்வளவு வெறித்தனமாக இருந்ததோ அதே அளவுக்கு அம்மா சென்டிமென்ட் காட்சிகளும் மெய்சிலிர்க்கும் வகையில் உள்ளது.

ரஜினியின் காலா படத்திற்கு பிறகு இந்தி நடிகை ஹுமா குரேஷிக்கு இந்த வலிமை திரைப்படம் நிச்சயம் ஒரு திருப்புமுனையாக அமையும். அந்த அளவுக்கு தன் கேரக்டரை சிறப்பாக செய்துள்ளார். மேலும் வில்லனாக நடித்திருக்கும் கார்த்திகேயா இந்த படத்திற்கு பிறகு நிச்சயம் தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய இடத்தை பிடிப்பார்.

வலிமை படத்தில் ஆக்ஷன் காட்சிகள் மட்டுமல்லாது, வசனங்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து விட்டது. ஏழையா இருந்து உழைத்து சாப்பிடுறவங்கல கேவலப்படுத்தாத, உயிரை எடுக்கும் உரிமை எனக்கு இல்லை, வலிமை என்பது அடுத்தவனை காப்பாற்றத்தான் அழிக்க இல்லை என்பது போன்ற வசனங்கள் அனைவரையும் சபாஷ் போட வைக்கிறது.

வரும் பொங்கலுக்கு உலகமெங்கும் ரிலீஸ் என்று டிரைலரின் இறுதியில் போட்டு அனைவரின் எதிர்பார்ப்பையும் எகிற செய்துள்ளனர். தற்போது இந்த ட்ரெய்லர் அஜித்தின் ரசிகர்களால் சமூக வலைத்தளங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது. பல வருடங்களாக காத்திருந்த அவர்களின் எதிர்பார்ப்பை பொய்யாக்காமல் வலிமை டிரைலர் மிகவும் வலிமையாக வெளிவந்துள்ளது.

இந்த வருட ஆரம்பத்தில் இருந்து அதிகம் பேசப்பட்ட இந்த வலிமை படம் இன்னும் சில நாட்களில் திரையரங்குகளில் வெளி வர உள்ளதால் ரசிகர்கள் அனைவரும் இந்த வருட பொங்கலை தெறிக்க விட ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad