கனடாவில் மாயமான சுவிஸ் இளைஞர்: பொதுமக்கள் உதவிக்கு கோரிக்கை

 

கனடாவின் வடக்கு வான்கூவர் பகுதியில் வசித்து வந்த சுவிஸ் இளைஞர் மாயமான நிலையில், பொதுமக்கள் உதவியை பொலிசார் நாடியுள்ளனர்.

வடக்கு வான்கூவர் பகுதியில் வசித்து வந்துள்ளார் 26 வயதான Sebastian Roloff. சுவிஸ் நாட்டவரான இவருக்கு நிரந்தர முகவரி ஏதும் இல்லை என்றே கூறப்படுகிறது.

பிரிட்டிஷ் கொலம்பியாவில் பதிவு செய்யப்பட்ட வாகனம் ஒன்றிலேயே Sebastian Roloff வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் நவம்பர் 14ம் திகதி கடைசியாக நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரை Sebastian Roloff தொடர்பு கொண்டு பேசியதாக தெரிய வந்துள்ளது.

ஆனால் அதன் பின்னர், டிசம்பர் 23ம் திகதி அவர் மாயமானதாக பொலிசாருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. இதுவரையான விசாரணையில், Sebastian Roloff மாயமான விவகாரத்தில் ஏதும் சதி வேலை இல்லை என்றே பொலிசார் தெரிவிக்கின்றனர்.

இருப்பினும், அவர் உயிருடன் இருப்பார் என்றே நம்புவதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர். குறித்த இளைஞர் தொடர்பில் புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ள பொலிசார், பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad