இலங்கையின் வருமாணம் எப்படி குறைந்தது ? மேலும் ஆப்பு வைத்த ஈழத் தமிழர்கள்- 700மில்லியன் 270 மில்லியன் ஆன கதை …

இலங்கை ஆண்டு தோறும் சுமார் 2 லட்சத்தி 70,000 ஆயிரம் வேலை ஆட்களை அரபு நாடுகளுக்கு அனுப்புவது வழக்கம். இவர்கள் ஊடாக அரசாங்கம் பெரும் தொகைப் பணத்தை அன்னிய நாணயமாகப் பெற்று வந்தது. ஆனால் கடந்த 2020ம் ஆண்டும் வெறும் 50,000 ஆயிரம் பேரை மட்டுமே இலங்கை அரசால், வெளிநாடுகளுக்கு அனுப்ப முடிந்தது. வெளிநாடுகளில் வேலை செய்வோர், மற்றும் வெளிநாடுகளில் உள்ள தமிழர்கள் இலங்கைக்கு வங்கி மூலம் அனுப்பும் காசு, ஆண்டு ஒன்றிற்கு 720M மில்லியன் லாடர்கள் ஆகும். ஆனால் கடந்த வருடம், இலங்கை அரசு வெறும் 270 மில்லியன் டாலர்களை தான் பெற்றுள்ளது. 60சத விகிதம் அடி வாங்கியுள்ளது. இன் நிலையில், உண்டியல் ஊடாக தமிழர்கள் இலங்கைக்கு பணத்தை அனுப்புவதன் மூலமாக, மேலும் இலங்கை அரசு வெளிநாட்டு காசை இழந்து வருகிறது. இன் நிலையில் பிரித்தானிய…

பிரித்தானியா கான்சர்வேட்டிவ் கட்சிக்கான தமிழர் அமைப்பு (BTC), இலங்கையை சிவப்பு பட்டியலில் போட்டுள்ளது. இதனால் பிரித்தானிய அரசு இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளும் நபர்களுக்கான அறிவுறுத்தலை(CDC) தரம் 3 ஆக உயர்த்தியுள்ளது. இது சிவப்பு எச்சரிக்கை ஆகும். இதன் காரணத்தால் வளைகுடா நாடுகள் இலங்கையர்களுக்கு வேலை வாய்ப்பை கொடுக்க அஞ்சி வருகிறார்கள். இதனால் இலங்கை அரசால், அரபு நாடுகளுக்கு ஆட்களை அனுப்ப முடியவில்லை. இது இவ்வாறு இருக்க பிரித்தானியாவை தொடர்ந்து அமெரிக்காவும், இலங்கையை சிவப்பு பட்டியலில் போட்டுள்ளது. எனவே இலங்கை செல்ல இருந்த பல சுற்றுலாப் பயணிகளும் இலங்கை செல்வதை தவிர்த்து வருகிறார்கள். இரு பக்கம் அடி விழுவது போல, தற்போது இலங்கை அரசால் ஆட்களை வெளிநாட்டுக்கு அனுப்ப முடியவில்லை. மேலும்… அதிக அன்னிய நாணயத்தை பெற்றுத்தரும் சுற்றுலாத் துறைக்கும் பலத்த அடி விழுந்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியிடம் இனி வெளிநாட்டு நாணயம் இல்லை. இதனால் இலங்கை மத்திய வங்கியால், வெளிநாட்டுக் கடனுக்கான வட்டியை கூட,  கட்ட முடியவில்லை என்றும். இறக்குமதி செய்ய பணம் இல்லை என்றும் அறியப்படுகிறது. வட்டியைக் கூட கட்ட முடியாத நிலைக்கு இலங்கை சென்றுள்ளதால், இனி எந்த ஒரு கடனையும் வெளிநாடுகள் கொடுக்காது. இதனால் மேலும் இறுக்கமான நிலைக்கு இலங்கை அரசு தள்ளப்பட்டுள்ளது.

இலங்கை அரசை சர்வதேச நாடுகள் டிபோஃல்ட் அரசு() என்று அறிவிக்கும் நிலை விரைவில் வரக் கூடும் என்று கூறப்படுகிறது. இனி இலங்கையில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் குறைந்த பட்சம் 10 ஆண்டுகள் பின்னரே 5% சத விகித வளர்சியை ஆவது எட்ட முடியும் என்ற நிலை தோன்றியுள்ளது. இதனால் சிங்கள மக்களே பெரிதும் பாதிப்படைய உள்ளார்கள். ஏன் எனில் தமிழர் பக்கத்தை எடுத்துக் கொண்டால், குறைந்த பட்சம் யாராவது ஒரு உறவினராவது வெளிநாட்டில் இருப்பார். அவர் பணத்தை அனுப்பி விடுவார். ஆனால் நாளாந்தம் வேலை பார்க்கும் சிங்கள மக்கள் பெரும் பின்னடைவை சந்திக்க உள்ளார்கள். ஏன் நாம் கோட்டபாயவுக்கு வாக்களித்தோம் என்று, அடுத்த 10 வருடங்கள் அவர்கள் சிந்திக்க நேரிடும்.

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை லைக் செய்து உங்கள் ஆதரவை தாருங்கள்.

Below Post Ad