“புதிதாக பரவும் மர்ம நோய்”…. இதுவரை 89 பேர் பலி…. திணறும் மருத்துவ ஆய்வாளர்கள்….!!

தெற்கு சூடான் நாட்டில் இதுவரை 89 பேர் அடையாளம் காணப்படாத மர்ம நோயால் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதனை தொடர்ந்து உலகச் சுகாதார அமைப்பின் நிபுணர்கள் அந்நாட்டின் ஜாங்லி மாகாணத்தில் உள்ள பங்காக்கில் அடையாளம் காணப்படாத நோயால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து தீவிர ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் WHO நிபுணர்கள் அண்மையில் வெள்ளப்பெருக்கினால் மோசமாக பாதிக்கப்பட்டு நோய்வாய்ப்பட்ட மக்களிடமிருந்து மாதிரிகளையும் சேகரித்து வருகின்றனர். அதேசமயம் வெள்ளப்பெருக்கினால் மக்களுக்கு வாந்தி பேதி ஏற்பட்டிருக்கலாம் என்று கணிக்கப்பட்டது. ஆனால் அந்த கணிப்பிற்கு மாறாக முடிவுகள் வந்துள்ளதால் மருத்துவ ஆய்வாளர்கள் புதிய நோய் குறித்து குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad