யாழ் இந்துக்கல்லுாரி பழைய மாணவன் அமிர்தலிங்கம் அகிலன் எனும் 31 வயதான ஜிம்னாஸ்டிக் வீரர் தவறான முடிவெடுத்து மரணமடைந்துள்ளார். வங்கி ஒன்றின் உத்தியோகத்தராக கடமையாற்றுபவராகவும் மிகவும் நட்புடன் அனைவருடன் பழகும் இவர் தற்கொலைக்கு முன்னைய தினமும் கொக்குவில் இந்துக்கல்லுாரியில் தான் பயிற்சி பெறும் வீடியோ ஒன்றையும் வெளியிட்டிருந்தார்.
அதன் பின்னரே அவர் தற்கொலை செய்துள்ளதாகவும் தெரியவருகின்றது. மனைவியுடன் ஏற்பட்ட முரண்பாடே தற்கொலைக்கு காரணம் எனத் தெரியவருகின்றது. ஒரு பெண் குழந்தைக்கு தந்தையான இவரும் மனைவியும் காதலித்தே திருமணம் முடித்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதுதான் வாழ்க்கை யாருடைய வாழ்வும் நிலையில்லை! உயிரோடு இருக்கும் காலங்களிலேயே இன்றுதான் கடைசிநாள் என்று ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து அன்பு செலுத்தி வாழனும். உயிர் போனால் போனதுதான்.வெறும் நினைவுகள் மட்டும் எஞ்சிய நாட்களை கொல்லும்!”