லண்டனில் கைது செய்யும் போதே சுட்டுக் கொன்ற பொலிசார்: அதிர்ச்சி வீடியோ வெளியானது !

நேற்றைய தினம்(12) லண்டன் மத்திய நகரப் பகுதியான கென்சிங்டனில், வங்கி ஒன்றை கொள்ளையடித்து விட்டு. பின்னர் Bet கட்டும் இடம் ஒன்றுக்கு சென்று அங்கும் துப்பாக்கியை காட்டி ஒரு கறுப்பின நபர் கொள்ளையடித்துள்ளார். அவர் பிளாக் கப்பில்(black taxi) ஏறி தப்பிச் செல்ல முற்பட்ட வேளை, ஆயுதம் தாங்கிய பொலிசார் Black Taxi சுற்றி வளைத்து,  அன் நபரை வெளியே வரச்சொல்லியுள்ளார்கள். ஆனால் அதற்கு முன்னதாகவே, ஒரு பொலிசார் அதிகாரி அவரை சுட்டு விட்டு, பின்னர் இழுத்து வெளியே எடுத்து.  கை விலங்கு போட்டுள்ளார்கள். இருப்பினும் அந்த கறுப்பின நபர் மாலை 4 மணி அளவில் இறந்து விட்டார். இதனை அடுத்து பொலிசார் மேல், கடும் விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டுள்ள நிலையில்… அதனை விசாரிக்க…

ஒரு குழுவை அமைப்பதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இருப்பினும் கறுப்பின நபரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட கைத்துப்பாக்கி நிஜமான துப்பாக்கி என்று பொலிசார் தெரிவித்துள்ளார்கள். வீடியோ கீழே இணைப்பு.