அதிகளவில் வாசிக்கப்பட்ட பதிவுகள்.

மர்ம நபர்களின் துணிகரம்…. பிரபல நாட்டில் அழிக்கப்பட்ட கொரோனா இன்ஃபர்மேஷன்…. முக்கிய தகவல் வெளியிட்ட அரசு….!!

பிரேசில் நாட்டின் சுகாதாரத் துறை இணையதளத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கான விவரங்கள் இருந்துள்ளது. இதனை ஹேக் செய்த மர்ம நபர்கள் பிரேசில் நாட்டின் சுகாதாரத் துறை இணையதளத்தில் இருந்த கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டார்களின் விவரங்களை அழித்துள்ளார்கள்.

அதோடு மட்டுமின்றி மேல் குறிப்பிட்டுள்ள விவரங்கள் வேண்டுமெனில் இமெயில் மூலம் தொடர்பு கொண்டு தங்களிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம் என்று அரசின் இணையதளத்திலேயே பதிவிட்டுள்ளார்கள். இது குறித்து அந்நாட்டின் அரசாங்கம் முக்கிய தகவல் ஒன்று தெரிவித்துள்ளது.

அதாவது மர்மநபர்கள் சுகாதாரத் துறையின் இணையதளத்தை ஹேக் செய்து அதிலிருந்த விவரங்களை அழித்தது அனைத்தும் தங்களிடமுள்ளது என்று தெரிவித்துள்ளது.