நடிகை தற்கொலை வழக்கில் திருப்பம் – நண்பர்களே மிரட்டியது அம்பலம்

பார்ட்டிக்கு போன இளம் நடிகை வீட்டுக்கு வந்து தற்கொலை செய்து கொண்ட வழக்கில் பார்ட்டியில் அந்த நடிகையுடன் பங்கேற்ற நண்பர்களே போதை தடுப்பு பொருள் அதிகாரிகள் போல் மிரட்டியதால் தான் அவர் தற்கொலை செய்து கொண்டதாக தெரிய வந்திருக்கிறது.

மும்பை ஜோகேஸ்வரி பகுதியைச் சேர்ந்தவர் அந்த இளம் நடிகை. கடந்த 3 நாட்களுக்கு முன்பு அவர் நண்பர்களுடன் சேர்ந்து பார்ட்டிக்குச் சென்றிருக்கிறார். அங்கே பார்ட்டியில், போதை பொருள் பயன்படுத்தியதால் உங்களை கைது செய்யப்போவதாக போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் சொல்லியிருக்கிறார்கள்.

அதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர், தன்னை கைது செய்யாமல் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். அப்படி என்றால் 40 லட்சம் ரூபாய் கொடுத்தால் விட்டு விடுவதாக சொல்லியிருக்கிறார்கள். அவ்வளவு பெரிய தொகையை என்னால் கொடுக்க முடியாது என்று சொன்னதும் 20 லட்சம் ரூபாய் தரவேண்டும் என்று அவர்கள் மிரட்டியிருக்கிறார்கள்.

அந்த பணத்தை தருகிறேன் என்று சொல்லி விட்டு வீட்டிற்கு வந்து இருக்கிறார் நடிகை. ஆனால் வீட்டிற்கு வந்த அவருக்கு 20 லட்சம் ரூபாய் பணத்தையும் எப்படிப் புரட்டுவது என்று தெரியாமல் விழித்திருக்கிறார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான நடிகை யாரிடமும் இது குறித்து பேசாமல் இருந்து வந்திருக்கிறார்.

இந்த நிலையில் மன உளைச்சல் அதிகமாகி அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். நடிகையின் தற்கொலை குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். அப்போது நடிகையுடன் சென்ற நண்பர்களே போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகள் போல தனது நண்பர்களை செட்டப் செய்து நடிகையிடம் பணம் பறிக்க போட்ட நாடகம் தெரியவந்திருக்கிறது. இதையடுத்து மேலும் அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad