சவுதி நாட்டின் தெற்கில் உள்ள ஜசான் என்ற நகரில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று ஏவுகணைத் தாக்குதல் நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் ஒரு ஏமன் குடியிருப்பாளரும், ஒரு சவுதி குடிமகனும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் ஒரு பெங்காலி குடியிருப்பாளர், ஆறு சவுதி அரேபியர்கள் பலத்த காயமடைந்துள்ளனர். இரண்டு கடைகள் மற்றும் 12 கார்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையே ஹவுத்தி இராணுவ செய்தித்தொடர்பாளர் Yahya Sarea 3 ஏவுகணைகள் ஜசான் நகரத்தை குறிவைத்து ஏவப்பட்டதாக தகவல் தெரிவித்துள்ளார். இதற்கு தக்க பதிலடி கொடுக்கும் விதமாக ஹவுத்தி பகுதிகளை குறிவைத்து சவுதி தலைமையிலான கூட்டுப்படை ஏமனில் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த பயங்கர சம்பவத்தில் ஒரு பெண் மற்றும் ஒரு குழந்தை கொல்லப்பட்டதாகவும், 7 பேர் பலத்த காயம் அடைந்ததாகவும் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.