சர்வதேச பொலிஸாரால் தேடப்பட்டு வந்த யுவதி கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது!!!

சர்வதேச போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் ‘இன்டபோல்’ எனப்படும் சர்வதேச பொலிசாரினால் ‘சிவப்பு அறிவித்தல்’ பிறப்பிக்கப்பட்டிருந்த பிரேசில் நாட்டை சேர்ந்த யுவதி ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

23 வயதான குறித்த பெண்ணை பிரேசில் பொலிஸார் கைதுசெய்வதற்கான ஆயத்தங்களை முன்னெடுத்திருந்தபோது, அவர் தாய்லாந்துக்கு தப்பிச்சென்றுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் முன்னெடுத்த விசாரணையில் தெரியவந்துள்ளது.

எனினும், நீண்ட காலம் நாட்டில் தங்கியிருக்கும் நோக்கில் குறித்த சந்தேக நபர் தாய்லாந்தில் இருந்து சிங்கப்பூர் ஊடாக இலங்கைக்கு வந்துள்ளார்.

Tags

Top Post Ad

Below Post Ad