“கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்!”….. திடீரென்று கேட்ட சத்தம்…. பதறியடித்து ஓடிய மக்கள்…..!!

அமெரிக்காவில் இருக்கும் சிகாகோ நகரின் ஒரு வணிக வளாகத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக அதிகமான மக்கள் கூடியிருந்தனர். அப்போது திடீரென்று அங்கிருந்த மக்களை நோக்கி துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தப்பட்டது. துப்பாக்கி சத்தத்தை கேட்டவுடன், மக்கள் பதறியடித்துக் கொண்டு ஓடியுள்ளனர்.

அதில் சிலர் அங்கிருந்த கடைகளுக்குள் புகுந்து, கதவை அடைத்து கொண்டார்கள். அதன்பின்பு அங்கு வந்த காவல்துறையினர் மக்கள் அனைவரையும் பாதுகாப்பாக வெளியேற்றி, காயமடைந்த 4 நபர்களை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இதற்கிடையில் காயமடைந்தவர்களில் இரண்டு பேர் குற்றவாளிகள் என்ற சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. அதாவது, துப்பாக்கிசூடு தாக்குதலின் போது, அவர்களுக்குள் சுட்டுக்கொண்டதில் காயம் ஏற்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

Tags

Top Post Ad

Below Post Ad

உங்கள் பிரதேச செய்திகளை +94 720 156 146 என்ற இலக்கத்திற்கு வாட்ஸாப் செய்யுங்கள். செய்திகளை உடனுக்குடன் பெற எமது முகநூல் பக்கத்தினை லைக் செய்யுங்கள்.