மடடக்களப்பு வர்த்தகரின் மனைவியை வெட்டிக் கொன்றது எதற்காக?? வேலைக்காரி பரபரப்பு வாக்குமூலம் இதோ!!

எஜமானி அணிந்திருந்த தங்கநகையை எனதாக்கிக்கொள்ள வேண்டும் என நீண்ட நாட்களாக ஆசைப்பட்டேன். அதன் காரணமாகவே எஜமானியை கண்டம் துண்டமாக வெட்டி கொலை செய்தேன் என மட்டக்களப்பு நகர் பார் வீதியில் எஜமானியை வெட்டிக் கொலை செய்த வேலைக்காரப் பெண் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

பொலிசார் மேற்கொண்ட விசாரணையில் இது தெரியவந்துள்ளதுடன் கைது செய்யப்பட்ட இருவரையும் எதிர்வரும் ஜனவரி 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சி.எம்.றிஸ்வான் உத்தரவிட்டார்.மட்டக்களப்பு நகரில் நகைக்கடை வர்த்தகரின் மனைவியை வேலைக்காரி பணத்துக்காக படுகொலை செய்து 46 பவுண் தங்க ஆபரணங்களை கொள்ளையிட்ட சம்பவம் மக்களிடையே பயத்தையும் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக வேலைக்காரியிடம் மேற்கொண்ட விசாரணையில் உண்மைகள் தெரியவந்துள்ளன.

நகரின் நடுப்பதியில் அரசடிப் பகுதியில் உள்ள பார் வீதியில்அதிக சனநடமாட்டம் உள்ள பகுதியில் மாடிக்கட்டிடம் கொண்ட வீட்டில் களுவாஞ்சிக்குடியில் தங்க ஆபரண விற்பனைக் கடை நடாத்திவரும் செவ்வராசா – செல்வி என்றழைக்கப்படும் தயாவதி ஆகிய தம்பதியருக்கு 23 வயதுடைய பெண் 26 வயதுடைய ஆண் பிள்ளைகளான இரு பிள்ளைகளுடன் எளிமையாக வாழ்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில் வர்த்தகர் செல்வராசாவின் வீட்டிற்கு மட்டக்களப்பு கருவப்பங்கேணி ஒம்பிறோஸ் வீதியில் வசித்துவரும் 27 வயதுடைய ரவி கார்த்திகா பெண் ஒருவர் தினமும் காலையில் வந்து மாலை வரை வீட்டில் மனைவிக்கு ஒத்துழைப்பாக சமையல் மற்றும் ஏனைய வீட்டு வேலைகளைச் செய்துவந்துள்ளார். அவருக்கு வேலைக்கான சம்பளத்தையும் வழங்கி வந்துள்ளனர்.

குறித்த வேலைக்காரி பின்னர் மலேசியாவுக்கு வீட்டு வேலை வாய்ப்பு பெற்று அங்கு சென்று வேலை செய்துவந்த நிலையில் போதைப் பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளார். அங்கிருந்து அவரை பொலிசார் பிடித்து நாட்டுக்கு திருப்பி அனுப்பிய நிலையில் இலங்கைக்கு வந்த நிலையில் வாழைச்சேனையில் திருமணம் முடித்துக் கொண்டு பெற்றோருடன் அங்கு சென்று குடியிருந்து 8 மாதங்களாக வாழ்ந்துவருகின்ற இவர் அடிக்கடி முன்னர் வேலை செய்த தனது எஜமானியின் வீட்டிற்கு வந்து சென்றுள்ளார்..

இந்த நிலையில் சம்பவ தினமான திங்கட்கிழமை (20) வேலைக்காரி எஜமானியின் தங்க நகையை தனதாக்கிக் கொள்ள வேண்டும் என்ற ஆசையின் காரணமாக தனது கணவரிடம் கல்லாற்றுக்கு தனது 48 வயதுடைய தந்தையுடன்(ஏரம்பு ரவி) செல்வதாக தெரிவித்தது தெரியவந்துள்ளது.

தனக்கு எஜமானியம்மா 85 ஆயிரம் ரூபா பணம் தர வேண்டும் அதனை வாங்கிவர வேண்டும் என தந்தையிடம் பொய் கூறி 48 வயதுடைய தந்தையாரை அழைத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறி தந்தையுடன் பஸ் வண்டியில் ஏறி மட்டக்களப்பு சினன்ஆஸ்பத்திரி சந்தியில் இறங்கியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து அங்கிருந்து மட்டு தலைமையக பொலிஸ் நிலையத்துக்கு முன்னால் உள்ள கடை ஒன்றில் கோழி வெட்ட கத்தி ஒன்று தேவை எனக் கோரி கத்தி ஒன்றை வாங்கி தனது தோல்பையில் வைத்துக்கொண்டு பார் வீதியிலுள்ள எஜமானியம்மாவின் வீட்டுக்கு இருவரும் சென்றனர். அங்கு முதலாளியின் கார் நிற்பதைக் கண்டு வீட்டுக்குச் செல்லாமல் அங்கிருந்து கருவப்பங்கேணியிலுள்ள தந்தை தொழில் புரிந்துவரும் ஹோட்டல் முதலாளியை சந்திப்பதற்காக அங்கு சென்று பின்னர் அங்கிருந்து மீண்டும் எஜமானியம்மா வீட்டுக்கு வந்துள்ளனர்.

அப்போது வர்த்தகர் செல்வராசா அருகிலுள்ள கோவில் திருவிழா காரணமாக கடைக்கு மகனாரை அனுப்பிவிட்டு மனைவியான 48 வயதுடைய தயாவதி மற்றும் மகளுடன் கோவிலுக்குச் சென்று வழிபட்டுவிட்டு சுமார் 11.30 மணியளவில் வீட்டுக்கு வந்து மனைவியார் கோவிலுக்கு செல்லும் போது முழு தங்க ஆபரணங்களையும் அணிந்து சென்ற நிலையில் அதோடு சமையலில் ஈடுபட்டுக் கொண்டிருந்துள்ள நிலையில் வேலைக்காரியும் அவரது தந்தையும் அங்கு சென்றதையடுத்து அவர்களை வரவேற்று கலந்துரையாடிய நிலையில் மதிய உணவை சாப்பிட்டுவிட்டு செல்லுமாறு வேலைக்காரி அவரது தந்தையிடம் கூறினார்.
இதன் பின்னர் வர்த்தகர் செல்வராசா சாப்பிட்டு விட்டு வீட்டின் முதலாம் மாடியிலுள்ள அறையில் தூங்கச் சென்ற நிலையில் மகளும் சாப்பிட்டுவிட்டு வீட்டு மண்டபத்தில் ஒரு பகுதியிலுள்ள குசன் சோபாவில் அமர்ந்து கொண்டு கையடக்க தொலைபேசியில் இருந்த நிலையில் நித்திரை போயுள்ளார்.

அப்போது எஜமானியம்மா தனது கையால் வேலைக்காரி மற்றும் அவளின் தந்தை ஆகிய இருவருக்கும் உணவு வழங்கி அவர்கள் சாப்பிட்ட பின்னர் எஜமானியம்மாவுடன் கதைத்துக் கொண்டிருந்த போது நேரம் மாலை சுமார் 4 மணியை நெருங்கிக் கொண்டிருந்த வேளை எஜமானியம்மாவும் வேலைக்காரியும் கதைத்துக் கொண்டிருந்ததையடுத்து அங்கிருந்து வேலைக்காரியின் தந்தையார் வீட்டின் வெளியிலுள்ள பகுதிக்குச் சென்றுள்ளார்.

இந்த நிலையில் வீட்டின் முன்பதியில் இருந்த களஞ்சிய அறைக்கு எஜமானியம்மா சென்றுள்ளபோது அவரை வேலைக்காரி பின் தொடர்ந்து சென்று அறையினுள் எஜமானியம்மாவை வெட்ட தனது தோல் பையில் வைத்திருந்த கத்தியை எடுத்தபோது எஜமானியம்மா அதனைக் கண்டு வேலைக்காரியை தள்ளிய போது வேலைக்காரியின் கையில் கத்தி பட்டதில் அவளுக்கு காயம் ஏற்பட்டதையடுத்து எஜமானியம்மாவை பிடித்து தள்ளிவிட்டபோது அவர் கீழே தலை குப்பற வீழ்ந்தபோது அங்கிருந்த தேங்காயில் தலை அடிபட்டு கீழே கிடந்த எஜமானியம்மா சத்தம் போடாதவாறு கழுத்தை சுற்று மின்னல் வேகத்தில் கழுத்தை கத்தியால் சுமார் 10 தடவை படபடவென வெட்டினார்.

பின்னர் அவர் ஓட முடியாதாவாறு முழங்கால்கள் இரண்டையும் வெட்டியதுடன் அவரின் கழுத்தில் இருந்த சுமார் 25 பவுண் தாலிக் கொடியை கழற்றியபோது தலைமுடி தாலியில் சிக்கியதையடுத்து தலைமுடியை வெட்டி தாலிக் கொடியை எடுத்துக்கொண்ட பின்னர் கையில் அணிந்திருந்த காப்புக்களை கழற்ற அங்கிருந்த பலகை கட்டையில் கையை வைத்து கையின் மணிகட்டு பகுதியை கத்தியால் வெட்டி துண்டாக்கிவிட்டு காப்புகளை கழற்றிக்கொண்டு.
கைவிரலில் இருந்த மோதிரங்களையும் கழற்றிவிட்டு காதில் இருந்த தோட்டைக் கழற்ற காதை தோட்டுடன் கத்தியால் அறுத்து எடுத்துக் கொண்டு 46 பவுண் தங்க ஆபரணங்களையும் கொள்ளையிட்டு அதனை தோல் பையில் பையில் எடுத்து வைத்துக்கொண்டு கத்தியை அங்கு விட்டுவிட்டு அறையில் இருந்து வெளியேற முற்பட்டுள்ளார்.

இந்த நிலையில் வீட்டின் வெளியே சென்ற வேலைக்காரியின் தந்தையார் அங்கு சென்ற போது மகள் செய்த கொடூரத்தைக் கண்டு மகள் மீது தாக்கி என்ன செய்துள்ளாய் என இருவரும் சண்டை பிடித்துக் கொண்ட போது ஏற்பட்ட சத்தத்தையடுத்து சோபாவில் நித்திரை யில் இருந்த எஜமானியின் மகள் விழித்தெழுந்து வந்தபோது அங்கு தாயார் இரத்த வெள்ளத்தில் கிடப்பதைக்கண்டு அதிர்ந்து கத்தியுள்ளார்.

இந்த கதறல் சத்தம் கேட்டு முதல் மாடியில் படுத்திருந்த கணவர் பதற்றத்துடன் கீழ் இறங்கிவந்தபோது மனைவி இரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து சத்தமிட்டார்.

இதன்போது கொள்ளையடித்த நகைகளுடன் வேலைக்காரியும் அவளது தந்தையும் அங்கிருந்து வெளியேறி தப்பி ஓடி வீதிக்குச் சென்றபோது வீதியில் இருந்த முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் அவர்களை பின்தொடர்ந்ததுடன் அங்கு கடைகளில் இருந்தவர்களும் ஒன்றிணைந்து அவர்களை மடக்கிப்பிடித்தனர் என பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி முகமட் ஜெஸ்லி தலைமையில் பொலிசார் மேற்கொண்ட விசாரணையில் வேலைக்காரி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு திங்கட்கிழமை இரவு சென்ற மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்ற நீதவான் ஏ.சி.எம்.றிஸ்வான் சம்பவ இடத்தை பார்வையிட்டு சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துமாறும் கொலைக்கு பயன்படுத்திய கத்தி உள்ளிட்ட தடயப் பொருட்களை சேகரித்து கொள்ளுமாறும் உத்தரவிட்டார்.

கொள்ளையடிக்கப்பட்டு மீட்கப்பட்ட 46 பவுண் தங்க ஆபரணங்கள் கொலைக்கு பயன்படுத்திய கத்தி மற்றும் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கமராவில் பதிவான சிசிரி ஒளித் தொகுப்புக்கள் அடங்கிய விசிடி எனப்படும் வண்தட்டு போன்ற தடயப் பொருட்களை மீட்ட பொலிசார் கைது செய்யப்பட்ட வேலைக்காரி மற்றும் அவளது தந்;தை ஆகிய இருவரையும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சி.எம்.றிஸ்வான் முன்னிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை (21) ஆஜர்படுத்தியபோது அவர்களை எதிர்வரும் ஜனவரி 4ம் திகதி 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad