ரெட் கார்டு போடாமலே பட வாய்ப்புகளை இழந்த நடிகை.. இதுக்குத்தான் ஓவரா பேசக்கூடாது

தமிழ் சினிமாவில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் நடிப்பில் வெளியான கனா, க/பெ ரணசிங்கம் போன்ற திரைப்படங்கள் அவருக்கு ரசிகர்களிடையே நல்ல பெயரை பெற்று தந்தது.

தற்போது தெலுங்கு சினிமாவிலும் கவனம் செலுத்தி வரும் இவர் த கிரேட் இந்தியன் கிச்சன் என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். இவர் இப்பொழுதெல்லாம் தமிழ் திரைப்படங்களை விட தெலுங்கு திரைப்படங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து நடித்து வருகிறார்.

மேலும் தமிழில் குடும்ப குத்துவிளக்கு போன்று அடக்க ஒடுக்கமாக நடிக்கும் இவர் தெலுங்கில் அதிக கவர்ச்சி காட்டி நடித்து வருகிறார். இதனால் அவருக்கு தெலுங்கு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. அடிக்கடி ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் வாயை கொடுத்து மாட்டிக் கொண்ட ஒரு சம்பவத்தைப் பற்றி காண்போம்.

ஐஸ்வர்யா ராஜேஷின் தாய்மொழி தெலுங்கு என்றாலும் பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னையில் தான். அவர் நடிப்பதற்கு முன்பு சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கு பெற்றுள்ளார். தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வரும் ஐஸ்வர்யா ராஜேஷிடம் பிரபல இயக்குனர் ஒருவர் கதை கூறியிருக்கிறார்.

அந்தக் கதையை கேட்டு விட்டு இது மொக்க கதை என்று கூறி இயக்குனரை அவமானப்படுத்தி விட்டாராம் ஐஸ்வர்யா ராஜேஷ். இதனால் ஆத்திரமடைந்த அந்த இயக்குனர் தனக்கு நெருக்கமான இயக்குனர்களிடம் இதைப் பற்றி கூறியிருக்கிறார். இதன் காரணமாக ஆறு மாத காலம் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பதற்கு வாய்ப்பு எதுவும் இல்லாமல் இருந்தாராம்.

ஓவரா கெத்து காட்டி பேசியதால் தான் சினிமாவில் ரெட் கார்டு போடாமலே ஆறு மாத காலம் பட வாய்ப்பு இன்றி தவிக்கிறார் இவர் என்று திரையுலகில் கிசுகிசுக்கின்றனர்.