“டேய் ஒரு ஸ்கூல் பொண்ணு சிக்கியிருக்கு சீக்கிரம் கிளம்பி வாங்கடா” -நண்பர்களை கூப்பிட்டு நடந்த கூட்டு பலாத்காரம்

குஜராத்தில் உள்ள டாங் மாவட்டத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி பக்கத்து கிராமத்தில் நடந்த திருமண நிகழ்ச்சியில் சிறுமி பங்கேற்றுள்ளார்.அவர் திருமணம் முடிந்து வீடு திரும்பும் வழியில், ஒரு 16 வயதான சிறுவன் அவரை பலாத்காரம் செய்தான். பின் அந்த சிறுவன் அளித்த தகவலின் அடிப்படையில், வழியில் காத்திருந்த எட்டு நண்பர்கள் அருகில் உள்ள வனப்பகுதிக்கு சிறுமியை வலுக்கட்டாயமாக அழைத்து சென்று அந்த சிறுமியை பலாத்காரம் செய்தனர். ஒருவர் அதை வீடியோ எடுத்துள்ளார் .

அப்போது அந்த வழியாக சிலர் வருவதை அறிந்து அனைவரும், அந்த சிறுமியிடம் நடந்தவற்றை வெளியே சொல்லக்கூடாது என என மிரட்டி விட்டு தப்பி ஓடி விட்டனர் . இதனால் இந்த சம்பவம் பற்றி சிறுமி பெற்றோரிடம் எதுவும் கூறவில்லை. ஆனால் அந்த கும்பல் பாலியல் பலாத்காரம் செய்யும் வீடியோவை எடுத்த நபர் ஒருவர் அதை சமூக வலைதளங்களில் சமீபத்தில் வெளியிட்டார் .அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சிறுமியின் உறவினர், பெற்றோருக்கு தகவல் தெரிவித்ததும் ,அவர்கள் போலீசில் அந்த வீடியோவை காமித்து புகார் அளித்தனர்.

அதை பார்த்த போலீசார் விசாரணை மேற்கொண்டு , சிறுமியை பலாத்காரம் செய்த 20 வயதிற்கு உட்பட்ட மூன்று சிறுவர்கள் உள்பட ஒன்பது பேரையும் கைது செய்தனர்.