சுப்பிரமணிய சுவாமி போட்ட சுவா- ஹா… ராஜபக்ஷ அரசுக்கு 10B பில்லியன் டாலர்களை வழங்கவேண்டும்-

மோடி அரசில் அங்கம் வகிக்கும் ஜனதா தள கட்சியின் தலைவரும், மத்தியில் பலம் மிக்க நிலையில் இருப்பவருமான சுப்பிரமணிய சுவாமி, ஒரு வேண்டு கோளை இந்திய அரசுக்கு விடுத்துள்ளார். அது என்னவென்றால், இலங்கையின் கஷ்டங்களை உடனே தீர்க்க சுமார் 10B பில்லியன், (அதாவது மில்லியன் அல்ல பில்லியன்) அமெரிக்க டாலர்களை, இந்திய அரசு இலங்கைக்கு கொடுக்க வேண்டும் என்று கோரியுள்ளார். இந்த நிவாரணம் ஊடாகவே இலங்கை அரசை காப்பாற்ற முடியும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார். இது இவ்வாறு இருக்க அடுத்த வாரம் இலங்கை வர உள்ள சீன அமைச்சர்கள், இலங்கைக்கு மேலதிக கடன் உதவிகளை வழங்க திட்டமிட்டுள்ளதாக தெரியவருகிறது. தற்போது நீயா ? நானா என்ற போட்டியில்….

இந்தியா என்ன செய்வது என்று தெரியாமல் திண்டாடி வருகிறது. இந்த நிலையில் சுப்பிரமணிய சுவாமி வேறு இந்த சுவா …ஹாவை தூக்கிப் போட்டுள்ளார். பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

Tags

Top Post Ad

Below Post Ad

எமது முகநூல் பக்கத்தினை லைக் செய்து உங்கள் ஆதரவை தாருங்கள்.