பெண் போல் பேசி.. ஆண்களை நிர்வாணமாக வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்த இளைஞர் இவர் தான் …

பெருமந்தூர் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமாரிடம் பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்தார். தன்னிடம் பெண் என்று கூறி ஆண் ஒருவர் சாட் செய்து தன்னை நிர்வாணமாக படம் பிடித்து ஏமாற்றி பணம் கேட்டு மிரட்டி வருவதாக புகாரில் தெரிவித்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த நரேந்திரன் என்ற இளைஞரை கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது திடுக்கிடும் தகவல் வெளியானது. அதன் விவரம் பின்வருமாறு:-

ராணிப்பேட்டை மாவட்டம் தெக்கால் அருகே உள்ள புளியங்கன்னு கிராமத்தைச் சேர்ந்தவர்தான் நரேந்திரன்(25). அப்பகுதியில் உள்ள தனியார் கிருஷ்ணா கல்லூரியில் Bஏ படித்து வரும் அவர் ஆண்களை குறிவைத்து ஏமாற்றியுள்ளார். அதாவது நரேந்திரன் முகநூலில் இளைஞர்களிடம் சாட் செய்து அவர்களின் தொலைபேசி எண்ணை பெற்று அவர்களின் எண்ணிற்கு குறுஞ்செய்தி ஒன்றை அனுப்புவார். அந்த குறுஞ்செய்தியை அவர்கள் கிளிக் செய்ததும் அவர்களது செல்போன் உள்ள புகைப்படம் வீடியோ தொலைபேசி எண்கள் இமெயில் ஐடி என முழுவதையும் ஹேக் செய்து விடுவார். இதுபோன்று சுமார் 20-க்கும் மேற்பட்ட இளைஞர்களின் செல்போன்களை ஹேக் செய்து.15-க்கும் மேற்பட்ட போலியான இமெயில் ஐடிக்களையும்.5-க்கும் மேற்பட்ட வாட்ஸ்அப் பை பயன்படுத்தி வந்துள்ளார் நரேந்திரன்.

மேலும் இளைஞர்களிடம் பெண்கள் சாட் செய்வது போல் பெண்களின் ஆபாச வீடியோக்களை வீடியோகால் மூலம் காண்பித்து தன்னைப் பெண் என நம்பவைத்து சாட் செய்துள்ளார். அதேபோல் அந்த இளைஞர்களை நிர்வாணமாக வீடியோ காலில் வரவழைப்பார். அதைப் பதிவு செய்து கொண்டு அவர்களது உறவினர்களுக்கு அந்த நிர்வாண வீடியோவை அனுப்பி விடுவேன் என மிரட்டி பணம் பறித்து வந்துள்ளார். ஒட்டுமொத்தத்தில் டெக்னிக்கல் கில்லாடி இவர். இளைஞர்களிடம் கடந்த 2 ஆண்டுகளில் 80 ஆயிரம் ரூபாய்க்கு மேல் மிரட்டி பணம் பறித்துள்ளார். கைது செய்யப்பட்ட நரேந்திரனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருவள்ளூர் கிளை சிறையில் அடைத்தனர். இளைஞர் ஒருவர் ஆண்களை நிர்வாணமாக வீடியோ எடுத்து மிரட்டி வந்த சம்பவம் திருவள்ளூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad