கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை தடுக்க வந்த இந்துத்துவா அமைப்பான பஜ்ரங்தள் இயக்கத்தினருடன் கர்நாடகாவின் தும்கூர் பெண் நந்தினி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகை உலகம் முழுவதும் டிச.25-ந் தேதி கொண்டாடப்பட்டது. இந்தியாவில் பல இடங்களில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை இந்துத்துவா இயக்கத்தினர் சீர்குலைக்க முயன்றதால் சர்ச்சை வெடித்தது. கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்குள் உள்ளே சென்று தாக்குதல் நடத்துவது, படங்கள், பொருட்களை தீ வைத்து எரிப்பது என பல சம்பவங்கள் நிகழ்ந்தன.
கர்நாடகா மாநிலம் முழுவதும் 39 இடங்களில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் பங்கேற்றோர் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன என்கிறது மக்கள் சிவில் உரிமைக் கழகம். கர்நாடகா மாநிலம் குனிகல் தாலுகாவில் உள்ள பிலிதேவாலயா கிராமத்தில் ராமச்சந்திரன் என்பவரது வீட்டில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அப்போது பஜ்ரங் தள் இயக்கத்தைச் சேர்ந்த சிலர் அந்த் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்தனர். கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள், பிரார்த்தனைகளை நிறுத்த வேண்டும் என்று அந்த கோஷ்டி கூச்சல் எழுப்பியது. ஆனால் இதற்கு அஞ்சாமல் அங்கிருந்த நந்தினி என்ற பெண் இந்துத்துவவாதிகளுடன் கடும் வாக்குவாதம் செய்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது. வீடியோ கீழே இணைப்பு.
Tumakuru. Women fight off Hindutva vigilantes who disrupted Christmas celebrations in Kunigal. The mob is asking the women why they are not wearing sindhoor like Hindus and why they are celebrating Christmas. Women respond saying they are Christian believers and wish to celebrate pic.twitter.com/Q9dR9muMaA
— Prajwal (@prajwalmanipal) December 30, 2021