ஒரு பெரும் பாறாங் கல் படகு மீது விழுந்தது 27 பேர் பலி எடுத்த சம்பவம் இது தான்…

பிரேசில் ஏரியில் படகுகள் மீது பாறை விழுந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் பலியாகினர். 32 பேர் படுகாயம் அடைந்தனர். மேலும் 20 பேரை காணவில்லை. காணவில்லை என்றாலே பாறையுடன் சேர்ந்து அவர்களும் தண்ணீரில் மூழ்கி இருக்க வேண்டும். பிரேசில் நாட்டின் தென்கிழக்கு பகுதியில் உள்ள கேபிடோலியோ பகுதியில் அமைந்துள்ள ஃபர்னாஸ் நிர்வீழ்ச்சி பகுதிக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்திருந்தனர். மோட்டார் படகுகள் மூலம் அருவி பகுதிக்கு அவர்கள் சென்ற நிலையில், அங்குள்ள உயரமான மலைப்பகுதியில் இருந்து பாறை ஒன்று உடைந்து மூன்று படகுகள் மீது விழுந்தது. இதனால் 7 பேர் உயிரிழந்துள்ளனர். தென்கிழக்கு பிரேசிலில் கடந்த சில நாட்களாக மிகக் கடுமையான மழை பெய்துவருவதால் பாறை சரிவுகள் அதிகமாக உள்ளதாக தீயணைப்புத்துறை வீரர்கள் தெரிவித்துள்ளனர். (கீழே வீடியோ இணைப்பு)

தீயணைப்பு வீரர்கள் உள்பட பல்வேறு மீட்புக் குழுக்கள் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.