புஷ்பா படத்தில் 3 நிமிட பாடலுக்கு நடிகை சமந்தா வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா? புதிய தகவல்..!

அல்லு அர்ஜுன் நடித்த ‘புஷ்பா’ திரைப்படத்தில் இடம் பெற்ற ‘ஊ சொல்றியா மாமா ஊஊ சொல்றியா மாமா’ என்ற பாடலுக்கு நடிகை சமந்தா ஆடிய குத்தாட்டம் பட்டிதொட்டி எங்கும் எதிரொலித்து வருகிறது. அந்த அளவிற்கு இந்த பாடல் மிகப் பெரிய அளவில் வைரல் ஆகியுள்ளது.

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியான, இந்த படம் ஹிட்டாக இந்த பாடலும் ஒரு முக்கிய காரணம் என்று விமர்சகர்கள் கருத்து தெரிவித்த நிலையில், இந்த பாடலுக்கு ஐட்டம் டான்ஸ் ஆட நடிகை சமந்தா வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

இந்த பாடலுக்கு அவர் ரூபாய் 5 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 3 நிமிடங்கள் மட்டுமே படத்தில் ஓடும் இந்த பாடலுக்கு நடனமாட முதலில் சமந்தா மறுத்ததாகவும், அதன் பின்னர் நடிகர் அல்லு அர்ஜுன் அவரை சமாதானப்படுத்தியதோடு, ரூ.5 கோடி சம்பளம் தர முன்வந்ததாகவும், அதன் பின்னரே சமந்தா இந்த பாடலுக்கு நடனமாட சம்பாதித்ததாகவும் கூறப்படுகிறது.