கரும்பு தின்று கொண்டிருந்தவரை 6 பேர் வெட்டி சாய்த்துவிட்டு ஓட்டம்

கும்பகோணம் அடுத்த திருவிடைமருதூர் பகுதியை சேர்ந்தவர் விமல். இவர் மீது கொலை மற்றும் திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்த நிலையில் இவர் நேற்று இரவு அவரது வீட்டின் அருகே உள்ள ஹோட்டலில் முன்பு நின்று கரும்பு சாப்பிட்டுக் கொண்டிருந்திருக்கிறார். அப்போது அங்கு வந்த 6 பேர் கொண்ட மர்ம நபர்கள் அவரை வெட்டி கொலை செய்து விட்டு தப்பி ஓடி இருக்கிறார்கள்.