ஆசிரியரான கணவர் தனது மனைவி அலுவலக நிமிர்த்தம் கொழும்பு செல்வதாகத் கூறி கொழும்பு சென்றுள்ளார். அதே வேளை மனைவி கடமைபுரிந்த வங்கியில் நத்தார் கொண்டாட்டங்கள் நடந்துள்ளதுடன் அதற்காக வங்கி அதிகாரியான பெண்ணின் குடும்பத்திற்கும் அழைப்பிதழ் அனுப்பபட்டு அவரது பிள்ளைகளுக்கும் பரிசு உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து மனைவிக்கு கூறாது குறித்த விழாவுக்கு தனது இரு பிள்ளைகளுடனும் சென்றுள்ளார். அங்கு அவர் சென்று தனது மனைவி கொழும்பு சென்ற விடயத்தையும் விசாரித்த போது மனைவி தனிப்பட்ட விடுப்பு எடுத்துச் சென்றுள்ளதாக வங்கியிலிருந்து கணவர் அறிந்துள்ளார்.
கணவர் மனைவிக்கும் கூறாது கொழும்புக்கு தனது பிள்ளைகளுடன் சென்று மனைவியின் நடவடிக்கைகளை கண்காணித்து ஆராய்ந்த போது மனைவியின் கனடாவிலிருந்து வந்த பாடசாலை கூட்டாளியுடனான கள்ளத் தொடர்பு வெளிச்சத்திற்கு வந்துள்ளது.