அமெரிக்காவுக்கு அதிர்ச்சி கொடுத்தவர் பிரித்தானியரா? வெளிவரும் மர்மம்!!

பயங்கரவாதியை விடுவிக்க வேண்டுமெனக் கோரி 4 பேரை ஆலயமொன்றினுள் பணயக் கைதிகளாக பிடித்து வைத்த மர்மநபர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில்,

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள பெத் இஸ்ரேல் சபை ஆலயத்தினுள் திடீரென புகுந்த மர்மநபர் 4 பேரை பணயக் கைதிகளாக பிடித்து , அமெரிக்காவால் வேடி கொய்தா என்று அழைக்கப்படும் பாகிஸ்தானைச் சேர்ந்த நரம்பியல் விஞ்ஞானியான ஆபியா சித்திக்கை விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்ததுடன், நூதனமாக மீட்பு நடவடிக்கையை மேற்கொண்டனர்.

இருப்பினும், 8 மணி நேரத்துக்கு பிறகு பணயக் கைதிகளில் ஒருவர் விடுவிக்கப்பட்டதுடன், சிறிது நேரம் கழித்து ஏனைய மூவரும் விடுவிக்கப்பட்டிருந்தனர்.

அவர்கள் நால்வரும் காயமின்றி விடுவிக்கப்பட்டுள்ளதாக டெக்சாஸ் மாகாண ஆளுநர் அபாட் உறுதிப்படுத்தியுள்ளதுடன், அவர்களை வீட்டுக்கு அனுப்பும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக அவர் கூறியுள்ளார்.

இருப்பினும், குறித்த மர்மநபர் ஆலயத்தினுள் இறந்துவிட்டதாக காவல்துறையினர் உறுதிசெய்துள்ளனர்.

ஆபியா சித்திக் எனும் நரம்பியல் விஞ்ஞானிக்கு, ஆப்கானிஸ்தானில் அமெரிக்க அதிகாரிகளை கொலை செய்ய முயன்ற குற்றத்திற்காக கடந்த 2010ஆம் ஆண்டு நியூஜோர்க் நீதிமன்றம் 86 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது.

தற்போது அவர் டெக்சாசின் போர்ட்வொர்த்தில் உள்ள பெடரல் மருத்துவ நிலைய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 4 பேரை பணயக் கைதிகளாக பிடித்து வைத்து ஆபியா சித்திக்கை விடுவிக்க வேண்டும் என்று மிரட்டல் விடுத்த மர்மநபர் ஆபியா சித்திக்கின் சகோதரராக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது. ஆனாலும், அவரது சகோதரர் ஹூஸ்டனில் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் குறித்த மர்ம நபர் யாரென்று இதுவரை கண்டறியப்படவில்லை என காவல்துறையினர் கூறியுள்ளனர்.

குறித்த சந்தேக நபர் சம்பவம் இடம்பெற்ற பகுதியில், அவரது சகோதரி பற்றி சத்தமிட்டு அழுததாகவும் அவருக்கு பிரிட்டிஷ் உச்சரிப்பு இருந்ததாகவும் அப்பகுதியில் உள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது ஒருபுறமிருக்க, பிரித்தானிய நபர் ஒருவர் டெக்சாஸில் மரணித்துள்ள விடயத்தை அந்நாட்டு அரச தரப்பு அறிந்துள்ளதாகவும், இது குறித்து அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

 

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad