“ரெண்டாவது கணவனும் தினம் காண்டாக்குறாரே..” -அடுத்து அந்த மனைவி என்ன செஞ்சார் பாருங்க.

தெலுங்கானா மாநிலம் கமரெட்டி மாவட்டத்தில் உள்ள அசம்பூர் காலனியில் சிறுதொழில் செய்து வந்த 35 வயதுடைய ஷேக் அஃப்ரோஸ் 30 வயதான ஃபர்சானா பேகம் என்ற பெண்ணுடன் வசித்து வந்தார் .அந்த பெண்ணுக்கு இந்த கணவர் ஷேக் இரண்டாவது கணவன் ஆவார் .இதனால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது .இந்நிலையில் அந்த கணவன் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி ,தினமும் குடித்து விட்டு வந்து அவரின் மனைவியை தகாத வார்த்தைகளால் திட்டி சண்டை போட்டு வந்துள்ளார் .

இந்நிலையில் கடந்த திங்கள்கிழமை இரவு மீண்டும் அந்த ஷேக் மது குடித்து விட்டு வந்து அவரின் மனைவியுடன் தகராறு செய்தார் .அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதத்தில் அந்த பெண் தன் கணவர் ஷேக்கை துணியால் கழுத்தை நெரித்து கொலை செய்தார் .

அதன் பின்னர் இறந்த ஷேக்கின் சகோதரர் இந்த கொலை பற்றி போலீசுக்கு தகவல் சொன்னார் .போலீசார் வழக்கு பதிந்து கணவரை கொன்ற அந்த மனைவி பேகத்தை அவரின் தாயார் வீட்டிலிருந்து கைது செய்து சிறையில் அடைத்தனர் .

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad