ஐரோப்பா மக்களிற்கு உலக சுகாதார மையம் எச்சரிக்கை

ஐரோப்பாவில் எதிர்வரும் ஆறு முதல் எட்டு வாரங்களில் பாதி பேர் ஒமிக்ரோனால் பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

பிராந்தியம் முழுவதும் மேற்கிலிருந்து கிழக்காக, அலைபோன்று ஒமிக்ரோன் பரவியுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் வைத்தியர் ஹென்ஸ் க்ளுஜ் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பாவில் ஆண்டின் தொடக்கத்தில் ஏழு மில்லியன் புதிய தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ள நிலையில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த இரு வாரங்களில் மட்டும் தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் எதிர்வரும் ஆறு முதல் எட்டு வாரங்களில் ஐரோப்பாவில் 50 சதவீத மக்கள் ஒமிக்ரோன் தொற்றால் பாதிக்கப்படுவார்கள் என தெரிவித்துள்ளார்.