“ஹபீஸ் சயீத் இல்லத்திற்கு அருகில் நடந்த வெடிகுண்டு தாக்குதல்!”…. மூவருக்கு மரண தண்டனை…!!!

ஹபீஸ் சயீத்தின் லாகூர் இல்லத்திற்கு வெளியில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பு தாக்குதலில் தொடர்புடைய 3 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.
மும்பை தாக்குதலில் மூளையாக இயங்கிய ஹபீஸ் சயீத்தின் லாகூர் வீட்டிற்கு வெளியில் கடந்த வருடம், ஜூன் மாதம் 23 ஆம் தேதி அன்று குண்டு வெடிப்பு தாக்குதல் நடந்தது. இதில் மூவர் உயிரிழந்தனர். மேலும், 20 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. பல கடைகள், வீடுகள் மற்றும் வாகனங்களும் சேதமடைந்தன.
இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக தடை செய்யப்பட்ட தெஹ்ரீக் ஐ தலீபான் அமைப்பின் ஒரு பிரிவில் உள்ள ஜியாவுல்லா, பீட்டர் பால் டேவிட், சஜ்ஜத் ஷா, மற்றும் ஆயேஷ் பிபி போன்றோர் கைதாகினர்.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை முடிந்தது. இந்நிலையில், லாகூர் நீதிமன்றம் 3 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்திருக்கிறது. மேலும், இந்த வழக்கில் குற்றவாளியான ஆயேஷ் பிபி என்ற பெண்ணுக்கு 5 வருடங்கள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad