முல்லைத்தீவு பகுதியில் 15 வயது சிந்துவின் விபரீத முடிவு

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் விளாத்திகுளம் வித்தியாபுரம் பகுதியில் கிணற்றில் இருந்து சிறுமி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

கடந்த 04.02.2022 அன்று இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

வவுனியாவினை சொந்த முகவரியாகவும் முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் விளத்திகுளம் வித்தியாபுரத்தில் வசித்துவந்த நாகநாதன் தமிழ்வாணி (சிந்து) என்ற 15 வயது சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்,

இவரது உயிரிழப்பு தொடர்பில் மரண விசாரணைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன்,

சிறுமியின் சடலம் இன்று பேராறு இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.