புஷ்பா புருஷன்கள்.. 8 பேருடன் உறவு.. 8 கணவன்கள்.. 28 வயது ஊர்மிளாவின் அட்ராசிட்டி.. அடேங்கப்பா!

ஒரு பெண் 8 கல்யாணம் செய்ததை கேள்விப்பட்டு, போலீசாரே வாயடைத்து போய்விட்டனராம்.. இது சம்பந்தமான விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.. இறுதியில் ஏகப்பட்ட விஷயங்களை வெளியே கொண்டு வருவார்கள் என தெரிகிறது.

8 பேரை திருமணம் செய்துள்ளார் ஒரு பெண்.. இத்தனைக்கும் அந்த பெண்ணுக்கு வயது வெறும் 28 தான் ஆகிறது.. மத்திய பிரதேசத்தை சேர்ந்தவர்.. ஊர்மிளா அஹிர்வார் என்று பெயர்.. இவருக்கு ரேணு ராஜ்புத் என்ற இன்னொரு பெயரும் உண்டு.. இதை தவிர எந்தெந்த ஊரில் எந்தெந்த ஆண்களை பார்க்கிறாரோ, அங்கே புதிதாக ஒரு பெயரை சொல்லி அறிமுகமாகி கொள்வார்.

வசதியான ஆண்களுக்கு மட்டுமே இவர் குறிவைப்பார்.. கொஞ்ச நாளில் வளைத்து பிடித்து மயக்கி, அவரையே திருமணமும் செய்து கொள்வார்.. பிறகு சமயம்பார்த்து, அவர்களிடம் இருந்து பணம் மற்றும் நகைகளை திருடிக் கொண்டு எஸ்கேப் ஆகிவிடுவதுதான் இவரது தொழில்.. ராஜஸ்தானில் ஜெய்ப்பூர், கோட்டா, மத்திய பிரதேசத்தின் தாமோ, சாகர் போன்ற இடங்களில் அடிக்கடி சுற்றி வந்துள்ளார்.. இந்த இடங்களில் உள்ள பணக்கார இளைஞர்களைதான் வளைத்து போட்டு ஏமாற்றி உள்ளார்..

நகை, பணம் திருடு போனபிறகு, பாதிக்கப்பட்ட ஒவ்வொரு கணவனும், விஷயம் தெரிந்து அதற்கு பிறகு போலீசுக்கு போயுள்ளனர்.. இப்படி ஏகப்பட்ட புகார்கள் ஊர்மிளா மீது குவிந்துவிட்டது.. அதனால், அந்த புகார்களின்பேரில் நடவடிக்கையையும் விரைந்து எடுத்தனர்.. இந்த விசாரணைகள் நடக்கும்போது ஊர்மிளாவுக்கு 7 கல்யாணம் ஆகியிருந்தது... 8வது கல்யாணத்துக்கு தஷ்ரத் படேல் என்ற இளைஞருக்கு வலைவீசினார்.. அந்த இளைஞர் சியோனி மாவட்டத்தை சேர்ந்தவராம்..

ஊர்மிளாவின் அழகில் மயங்கிய தஷ்ரத் படேல், எந்தவிஷயமும் தெரியாமல் 8வதாக வாக்கப்பட்டுவிட்டார்.. தஷ்ரத் புது மனைவியை, அவரது சொந்த கிராமத்தில் உள்ள அனைவருக்கும் நேரில் அழைத்து சென்று காட்ட வேண்டும் என்று விரும்பி உள்ளார்.. அதற்காக, எல்லா நகைகளையும் மனைவிக்கு அணிவித்து, காரில் ஊர்மிளாவை உட்கார வைத்து கிளம்பி உள்ளார்..

ஆனால், ஏதோ ஒரு கிராமத்தில் போய் மாட்டிக் கொண்டால், மறுபடியும் ஊருக்கு திரும்ப முடியாதே என்று நினைத்த ஊர்மிளா, பாதி வழியிலேயே திடீரென தனக்கு உடம்பு சரியில்லை என்று சொல்லி நாடகமாடி உள்ளார்.. பிறகு, கணவனிடம் வேண்டுமென்றே தகராறு செய்து, நடுவழியில் காரில் இருந்தும் கீழே இறங்கியதாக கூறப்படுகிறது... ஆனால், ஊர்மிளா இறங்கிய இடத்தில், ஏற்கனவே ஒரு இளைஞர் தயாராக பைக்கில் காத்திருக்கிறார்.. அவர் பெயர் பாக்சந்த் கோரி.. அவரை முன்கூட்டியே ஊர்மிளா அங்கு வர சொல்லி இருக்கிறார் போலும்.. 8வது கணவனிடமிருந்து ஆட்டைய போட்ட பணம், நகைகளுடன், அந்த பைக்கில் ஏறி பறந்துவிட்டார்.

இதையெல்லாம் பார்த்து அதிர்ந்த படேல், அதற்கு பிறகுதான் தான் ஏமாற்றப்பட்டுவிட்டோம் என்பதை உணர்ந்துள்ளார். உடனடியாக அங்கிருந்தபடியே போலீசுக்கு தகவல் சொல்லவும், ஏற்கனவே ஊர்மிளாவை தேடி கொண்டிருந்த போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, ஊர்மிளாவை விரட்டிப் பிடித்து கைது செய்தனர்... ஊர்மிளாவிடம் நடத்தப்பட்ட விசாரணையில்தான் 8 கல்யாணம் செய்த விஷயமே தெரியவந்தது.. அந்த திருமணங்களை அவரே வாக்குமூலத்தில் ஒப்புக் கொண்டார்.

மேலும், இந்த திருமண மோசடிக்கு அர்ச்சனா ராஜ்புத், பாக்சந்த் கோரி, அமர் சிங் போன்றோரும் ஊர்மிளாவுக்கு இத்தனை காலமும் உதவியிருக்கிறார்கள்.. அவர்களையும் போலீசார் கைது செய்துள்ளனர்.. இப்போது விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.. 8 கணவன்களிடமிருந்து எவ்வளவு பணம், நகை இதுவரை கொள்ளையடித்தார், இதைதவிர வேறு யாரிடமாவது ஊர்மிளாவுக்கு பழக்கம் உள்ளதா? இவரிடம் எத்தனை பேர் ஏமாற்று போயிருக்கிறார்கள்? என்ற விசாரணைகள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.


Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad