நம்ம மருத்துவர் பிரியந்தினிக்கு இப்படி ஒரு நிலையா? வெளியான புதிய ஓடியோ!

கண்டாவளை M.O.H பிரிவு இப்போதுதான் புத்துணர்வு பெற்று எழுந்துகொண்டிருக்கிறது அதற்கு காரணம் இப்போது அங்கு MOH ஆக பணிக்கு வந்துள்ளDr. Priyaanthini Kamalasingam அவர் துணிச்சலாக மருத்துவத்துறைக்குள் நடக்கும் ஊழல்களை பொது வெளியில் பகிர்ந்து வருகிறார்.

ஒரே நாளில் ஒரு கிராமத்தை சேர்ந்த 300 க்கு மேற்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு கண்ணில் குறைபாடு உள்ளது அவர்கள் கண்ணாடி பாவிக்க வேண்டும் என ஒரு பாடசாலை அதிபர் ஊடாக மாபெரும் மருத்துவ கொள்ளையில் ஈடுபட இருந்த நபர்களை இனம்காட்டி அந்த சம்பவத்தை தடுத்து நிறுத்தியும் இருந்தார்.

இதுதான் இப்போது இங்கிருக்கும் அரசியல் வால்பிடி அதிகாரிகளுக்கு பிரச்சனையாக உள்ளது.

நேர்மையான அதிகாரிகளை கலைத்து விட்டு ஊழல் வாதிகளை வைத்து எங்கள் பிரதேசத்தை நாசப்படுத்தும் செயற்பாடுகளுக்கு எங்கள் மக்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என மக்கள் ஆதரவாக உள்ள நிலையில் வைத்தியர் எனப்படும் ஒருவர் மிரட்டும் மற்றும் ஒரு ஓடியோ வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

புதிய ஓடியோ வெளியானதைத் தொடர்ந்து கிளிநொச்சி மாவட்ட மக்கள் அதிர்ச்சிக்குள்ளாகிமை குறிப்பிடத்தக்கது.