யாழில் கோயில் ஐயரை முழு நிர்வாணமாக்கி அலங்கோலம் செய்த இளைஞனுக்கு நடந்த கதி!!

பூசாரி ஒருவரை நிர்வாணமாக்கி பெருந்தொகை பணம் கப்பமாக பெற்ற குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கிளிநொச்சியிலிருந்து பருத்தித்துறை – கெருடாவில் பகுதிக்கு பூசை செய்ய வந்திருந்த பூசகரிடமே இவ்வாறு கப்பம் பெறப்பட்டிருப்பதாக பருத்தித்துறை பொலிஸார் கூறினர். கோவில் ஐயரிடம் கப்பல் கோரி பணத்தைப் பெற்று இருக்கலாம். ஆனால் ஐயாவை ஏன் நிர்வாணமாக்கி அடித்து காசைப் பறித்தார் என்பது தான் இதுவரை புரியவில்லை என்கிறார்கள் பொலிசார். ஐயாவிடம் பெரிதாக பணம் இல்லை. இது பணம் பறிக்கும் வேலையா ? இல்லை முன் பகை காரணமாக ஏவப்பட்ட அடியாள் இவரா என்ற கோணத்தில் பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள் என அதிர்வு இணையம் மேலும் அறிகிறது.