ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதிலிருந்து பெண்களுக்கு கடும் விதிமுறைகளை நடைமுறைப்படுத்தி வருகிறார்கள். அதன்படி அரசாங்க பணிகளில் அதிகமாக பெண்கள் பணியாற்ற தடை விதித்திருக்கிறார்கள். எனினும், ஒரு சில துறைகளில் பெண்கள் பணிபுரிந்து வருகிறார்கள்.
அவர்கள் கட்டாயமாக ஹிஜாப் அணிந்து வர வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தலிபான்கள் அரசாங்கத்தில் பணியாற்றக்கூடிய பெண்கள் போர்வைகளை வைத்தாவது, தங்களின் உடலை முழுமையாக மூடிக்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறார்கள்.
இதனை பின்பற்றாத பெண்கள், பணியிலிருந்து நீக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தலிபான்களின் செய்தி தொடர்பாளர் இது பற்றி தெரிவித்ததாவது, “எந்த விதமான ஹிஜாப் உடையையும் பெண்கள் அணியலாம். அது, அவர்களது விருப்பம். ஆனால், தங்கள் உடலை முழுவதுமாக மறைத்திருக்க வேண்டும். அதற்காக அவர்கள் போர்வை போர்த்திக்கொண்டாலும் சரி தான்” என்று கூறியிருக்கிறார்.