மொத்தமா டின்டரில்(Tinder) மட்டும் 50 கோடியை இழந்த செக்ஸ் பிரியர்கள்- பேச்சில் மயக்கி …

அமெரிக்காவில் 2021-ஆம் ஆண்டில் மட்டும் கிட்டத்தட்ட 24,000 பேர் காதல் மோசடியில் சுமார் 100கோடி டாலரை இழந்திருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதுதவிர, புகார் அளிக்காத பலரும் கணக்கில் வரமால் உள்ளனர் என்றும் அவை கூறுகின்றன. இதற்கு மோசடிக்காரர்கள் பெரும்பாலும் பயன்படுத்தும் ஆயுதம், சமூக வலைதளங்கள்தான். இதில் டின்டரும் அடங்கும். போலி வலைதள கணக்குகளை உருவாக்கி, அதில் பேச்சை வளர்த்து, ஒருவரின் அன்பு மற்றும் நம்பிக்கையை பெறவேண்டியது, பிறகு காதல் அல்லது நெருங்கிய உறவு என்ற மாயை தோற்றத்தை உருவாக்கவேண்டியது, நம்பிக்கையை வளர்த்தபிறகு அவர்களிடமிருந்து கொள்ளையடித்துவிட்டு உறவை முறித்துக்கொள்வது. இதுதான் பெரும்பாலான புகாரிகளின் பிண்ணனியாக இருக்கிறது.

இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்கள் காதல் மோசடியில் வல்லுநர்களாக இருக்கிறதாகவும் அந்த சர்வே கூறுகிறது. மேலும் அவர்கள் தங்களை மிகவும் உண்மையானவராக, அக்கறையுடையவராக மற்றும் நம்பிக்கைக்குரியவராக காட்டுவதில் திறமையானவர்களாக இருக்கின்றனர் என்றும் கூறுகிறது. இந்த மோசடிக்காரர்கள் எவ்வளவு சீக்கிரம் ஒரு உறவை உருவாக்கி வளர்க்கமுடியுமோ அவ்வளவு சீக்கிரம் வளர்த்து, திருமணம் குறித்த நம்பிக்கைகளை கொடுத்து, நேரில் சந்திப்பதற்காக திட்டங்களை வகுத்து, அதற்கு பணம் கேட்டு ஏமாற்றி பணத்தை கொள்ளையடித்து இருப்பதும் பெரும்பாலான வழக்குகளிலிருந்து தெரியவந்திருக்கிறது.

அதுவும், உன்னுடைய வங்கிக்கணக்குக்கு பணம் அனுப்புகிறேன் என்று கேட்டு விவரங்களை வாங்கி, பிறகு கணக்கிலிருக்கிற பணத்தை கொள்ளையடித்திருக்கின்றனர். மேலும் இதுபோன்ற மோசடிக்காரர்கள் தாங்கள் கட்டுமான தொழிலில் இருப்பதாகவும், புராக்ஜெக்ட்டில் பிஸியாக இருப்பதாகவும் கூறியே நேரில் சந்திப்பதை தவிர்த்திருக்கின்றனர். மேலும் அவர்கள், அவசர மருத்துவச் செலவு மற்றும் எதிர்பாராத அரசாங்க கட்டணம் என்று கூறியே பணத்தைப் பறித்திருக்கின்றனர்.

ஒரு நபர் தனது கணக்கில் குறிப்பிட்டிருக்கும் பெயர், போட்டோ மற்றும் அடிப்படை தகவல்களை அதே விவரங்கள் வேறு கணக்கில் இருக்கிறதா என்று நன்றாக தேடிப்பாருங்கள்
நிதானமாக அதே சமயம் நிறைய கேள்விகளை கேளுங்கள்
ஒருவர் மிகவும் நேர்த்தியானவராக காட்டிக்கொண்டு, பேசிய சில நாட்களிலேயே சமூக வலைதளத்தை விட்டு விலகச்சொல்லி, நேரடியாக தன்னிடம் தொடர்புகொள்ள சொன்னால் ஜாக்கிரதையாக இருங்கள்

ஒருவர் உங்களை உங்கள் குடும்பம் மற்றும் நண்பர்களிடமிருந்து தனிமைப்படுத்துதல், அந்தரங்க புகைப்படங்களை அனுப்பச்சொல்லி கேட்டல் மற்றும் பொருளாதார விவரங்களை கேட்டால் எச்சரிக்கையாக இருக்கவும். அதை வைத்தே பின்னாளில் மிரட்டி பணம் பறிக்கும் வாய்ப்புகள் அதிகம்.
நேரில் சந்திப்பதாகக் கூறிவிட்டு, ஏதேனும் காரணம் சொல்லி அதை தள்ளிப்போட்டுக்கொண்டே போனால் அந்த நபரிடமிருந்தே விலக்கொள்வது நல்லது
ஆன்லைனில் மட்டுமே சந்தித்த நபருக்கு பணமோ, க்ரிப்டோகரன்சியோ அல்லது பரிசுப்பொருகளோ அனுப்பவேண்டாம்.
சமூக வலைதள உறவில் சந்தேகம் ஏற்பட்டால், உடனடியாக அந்த உறவை துண்டித்துவிட்டு அந்த கணக்குமீது புகார் அளிக்கவும்.

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad