தொடரும் தாக்குதல்…. 12 பேர் காயம்…. அதிரடியில் சவுதி அரசு….!!

சவுதி அரேபியாவின் ஏமன் எல்லைக்கு அருகில் அபா விமான நிலையம் உள்ளது. அங்கு திடீரென ஹவுதி போராளிகள் ட்ரோன் மூலம் தாக்குதலில் ஈடுபட்டனர். இதனை அடுத்து சவுதி அதிகாரிகள் வான் பாதுகாப்பு அமைப்பின் மூலம் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தினர்.

இந்த தாக்குதலில் ட்ரோன்களில் உள்ள பாகங்கள் கீழே விழுந்து உள்ளது. அதனால் உள்நாடு மற்றும் வெளிநாட்டை சேர்ந்த 12 பணியாளர்கள் காயமடைந்ததாக சவுதி அரசு தெரிவித்துள்ளது.