பற்றைக்குள் கட்டிப் புரண்ட கள்ளக்காதல் ஜோடி. பார்த்த 8 வயது சிறுவன் கொலை.

அப்போது சிறுவன் உதய் கிரண் மாமா சகாதேவன் அதே கிராமத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரி என்ற பெண்ணுடன் திருமணத்திற்கு புறம்பாக தொடர்பு வைத்திருந்தான். இருவரும் உடலுறவில் ஈடுபட்டதை உதய் கிரண் பார்த்துவிட்டார். இதனால் தங்கள் விஷயத்தை யாரிடமும் சொல்லக்கூடாது என சிறுவனை கண்டித்தனர். ஆனால் உதய் கிரண் தனது அம்மாவிடம் சொல்லி விடுவாரோ என்று அவர்கள் பயந்தனர். 

உல்லாசத்தில் ஈடுபட்டதை பார்த்த 8 வயது சிறுவனை அடித்துக் கொலை செய்த கள்ளக்காதல் ஜோடியை போலீசார் கைது செய்துள்ளனர்.  இது ஆந்திர மாநிலம் சித்தூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்று செய்தித்தாளை திருப்பினாலே கொலை , கொள்ளை குறித்த செய்திகளே ஆக்கிரமித்துள்ளன. அதில் பெரும்பாலான கொலைகள் கள்ளக்காதலை மையமாக வைத்தை அரங்கேறுவதையும் காண முடிகிறது. அந்த வகையில்  தங்கள்  கள்ளக்காதல் விவகாரம் வெளியில் தெரிந்து விடக்கூடாது என்பதற்காக கள்ளக்காதல் ஜோடி ஒன்று 8 வயது சிறுவனை அடித்துக்  கொலை செய்துள்ள கொடூரம் நிகழ்ந்துள்ளது. ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் காளிகிரி பகுதியை சேர்ந்தவர் கே.ரவி-துளசி தம்பதியர். இவர்கள் மகன் உதய்கிரண், கடந்த 14ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை மாயமானான். வெகு நேரமாகியும் மகன் வீடு திரும்பாததால் பெற்றோர்கள் ஊர் முழுக்க தேடினர். அன்று மாலை அடவரப்பள்ளி அருகே உள்ள மரத்தில் சிறுவன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்தான்.

இதைப் பார்க்க மக்கள் பெற்றோர்களுக்கு தகவல் கூறினார், விழுந்தடித்து ஓடிய பெற்றோர் மகன் மரத்தில் தொங்கிய நிலையில் சடலமாக கிடப்பதை பார்த்து தலையில் அடித்து கதறு அழுதனர்.இது அப்பகுதி மக்களை பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது. இதைடையடுத்த சம்பவட இடத்திற்கு வந்த  மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் நேரில் பார்வையிட்டு சிறுவன் கொலை குறித்து விசாரிக்க உத்தரவிட்டார். மதனப்பள்ளி டிஎஸ்பி ரவி மனோகராச்சாரியா தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டது. அந்த விசாரணையில் சிறுவன் அடித்துக் கொலை செய்யப்பட்டதும், அதற்கான மர்ம முடிச்சுகளும் அவிழ்ந்தது. கொலை நடந்த ஆன்று மாலை சிறுவன் உதய்கிரண் ஒதுக்குப்புறமாக விளையாடிக் கொண்டிருந்தான்,

அப்போது சிறுவன் உதய் கிரண் மாமா சகாதேவன் அதே கிராமத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரி என்ற பெண்ணுடன் திருமணத்திற்கு புறம்பாக தொடர்பு வைத்திருந்தான். இருவரும் உடலுறவில் ஈடுபட்டதை உதய் கிரண் பார்த்துவிட்டார். இதனால் தங்கள் விஷயத்தை யாரிடமும் சொல்லக்கூடாது என சிறுவனை கண்டித்தனர். ஆனால் உதய் கிரண் தனது அம்மாவிடம் சொல்லி விடுவாரோ என்று அவர்கள் பயந்தனர். தங்களது விவகாரம் எங்கே வெளியில் தெரிந்துவிடுமோ என அஞ்சினர், சிறுவனுக்கு அறிவுரை கூறிக் கொண்டிருந்த போதே சிறுவனை கள்ளக் காதலி  தடியால் அடித்தார். இதில், உதயகிரண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதனையடுத்து சிறுவனை மரக்கிளையில் தூக்கில் தொங்கவிட்டு விட்டு சென்று விட்டனர். திருமணத்திற்கு புறம்பான உறவை மறைக்க சொந்த மாமனே கொடூரமாக கொன்றுள்ள சம்பவம் விசாரணையில் தெரியவந்தது . இந்நிலையில் சிறுவனம் மர்ம மரண வழக்கி கொலை வழக்காக மாற்றப்பட்டது. கொலையில் ஈடுபட்ட கள்ளக் காதல் ஜோடியை போலிசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 


Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad