படிக்க வந்த மாணவி இருவரை படுக்கையில் வைத்து துஷ்பிரயோகம். விதானையார் கைது.

வீட்டில் பாடம் நடத்துவதாக கூறி சிறுமிகளை அழைத்துவந்த துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கிராம உத்தியோகஸ்த்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது,

இரண்டு பதின்ம வயது சிறுமிகளை தனியார் கல்வி வகுப்புகளை நடத்துவதாக தெரிவித்து தனது வீட்டிற்கு அழைத்துவந்து

பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே கிராம உத்தியோகத்தரை பொலிஸார் கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது.

14 மற்றும் 4 மாத வயதுடைய சிறுமியும், 14 மற்றும் 3 மாத வயதுடைய சிறுமியும், வீட்டுப் பயிற்சி வகுப்புகளுக்குச் சென்று கொண்டிருந்தனர்.

இரண்டு சிறுமிகளும் மருத்துவ பரிசோதனைக்காக ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட கிராம உத்தியோகஸ்த்தரும் திருமணமானவர். என கூறப்படுகின்றது.
Tags

Top Post Ad

Below Post Ad

எமது முகநூல் பக்கத்தினை லைக் செய்து உங்கள் ஆதரவை தாருங்கள்.