அடித்து கொலை செய்து நீரோடையில் வீசப்பட்ட இளைஞன்.
மூதூர் காவல் நிலைய பிரிவில் உள்ள இரால்குழி பாலத்திலிருந்து சுமார் 100 மீற்றர் தொலைவிலுள்ள கடற்கரையோரத்தில் இறந்த நிலையில் மிதந்து கொண்டிருந்த மீனவர் ஒருவரின் சடலமொன்று நேற்று புதன்கிழமை (04) மீட்கப்பட்டுள்ளதாக மூதூர் காவல்துறையினர் தெரிவித்தனர்.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் மூதூர் – இரால்குழி பகுதியைச் சேர்ந்த சூசப்பிள்ளை ஜெயராம் வயது (25) என காவல்துறையினர் தெரிவித்தனர்.
கடலுக்கு மீன்பிடிப்பதற்காக கடந்த திங்கட்கிழமை மாலை சென்ற குறித்த இளைஞன் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது குடும்ப உறவினர்கள் மூதூர் காவல் நிலையத்தில் செவ்வாய்கிழமை (03) முறைப்பாடு செய்திருந்தனர்.
இந்நிலையில் இன்று கடலுக்குச் சென்றோர் சடலமொன்று மிதந்து கொண்டிருப்பதை கண்டு காவல்துறையினருக்கும்,கிராம மக்களுக்கும் அறிவித்ததை அடுத்து காணாமல் போன இளைஞனின் சடலமென கண்டறியப்பட்டது.
குறித்த சடலமானது உருக்குலைந்த நிலையில் காணப்படுவதோடு, இளைஞன் கொலை செய்யப்படானா? அல்லது இயற்கை இறப்பா? என்பது இதுவரை கண்டறியப்படாத நிலையில் மூதூர் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.