நீதிமன்றத்தில் துப்பாக்கி சூடு. விசாரணைக் கூண்டில் இருந்த நபரை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம்!

கொழும்பில் நீதிமன்றத்திற்குள் துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போதைப்பொருள் தொடர்பிலான வழக்கு விசாரணையொன்று இடம்பெற்றுக்கொண்டிருந்த சந்தர்ப்பத்திலேயே இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

கல்கிஸ்ஸ நீதிமன்றத்திற்குள் இன்று பிற்பகல் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வழக்குடன் தொடர்புடைய பிரதிவாதி, நீதிமன்ற விசாரணை கூட்டில் இருந்த சந்தர்ப்பத்திலேயே துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.

வெளியில் இருந்து சென்ற நபர் ஒருவரே விசாரணைக் கூண்டில் நின்ற பிரதிவாதியை நோக்கி, இரண்டு தடவைகள் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், அவரின் இலக்கு தவறியதாகவும், இந்த துப்பாக்கிச் சூட்டில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.

அதனைத் தொடர்ந்தும், துப்பாக்கி பிரயோகம் நடத்திய சந்தேக நபர், காவல்துறையினரிடமிருந்து தப்பிச் செல்வதற்காக நீதிமன்றத்திற்குள் மற்றுமொரு துப்பாக்கி பிரயோகத்தை நடத்தி, அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் கல்கிஸ்ஸ காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad