நாயொன்றை கொடூரமாக சித்திரவதை செய்து கொன்ற சம்பவத்துடன் தொடர்புடைய கொடூர இளைஞர்கள் இருவரை பொலிசார் தேடி வருகிறார்கள்.
புங்குடுதீவு, 9ஆம் வட்டாரத்தை சேர்ந்த இளைஞன் ஒருவன் நாயொன்றை பிடித்து நான்கு கால்கள், வால் என்பவற்றை கோடாரியால் வெட்டி, பின்னர் கட்டையொன்றில் வைத்து முகத்தை கொத்தும் கொடூர காட்சிகள் முகப்புத்தகத்தில் பகிரப்பட்டது.
கொடூர கொலையாளியையும், அதை முகப்புத்தகத்தில் பதிவிட்டவனையும் கைது செய்ய பொலிசார் நடவடிக்கையெடுத்துள்ளனர்.