மேற்படி தரு வணக்கத்தில் யாழ் மாவட்ட அரசஅதிபர் திரு மகேசன் அவர்களும்
மேலதிக அரசஅதிபர் திரு.பிரதீபன் அவர்களும் யாழ்ப்பாணம் வலயக்கல்விப்பணிப்பாளர் திரு.மு.இராதாகிருஸ்ணன் அவர்களும் மற்றும் பேராசிரியர்களான திரு.சண்முகலிங்கன் மற்றும் வணிகத்துறை பேராசிரியர் திரு. வேல்நம்பி பேராசிரியர் திரு.கிருஸ்ணராஜா அவர்களும் பெருந்தகைகளாக கலந்து சிறப்பித்தனர். Green layer சுற்றுச்சுழல் அமைப்பினால் 10000 மரக்கன்றுகளை நாட்டியமைக்காக நிறைவு விழாவும் ஒரு இலட்சம் மரக்கன்றுகளை புதிய இலக்காக நிர்ணயிக்கின்ற நிகழ்வில் 28 சுற்றுச்சுழல் சார்ந்த அமைப்புகளுக்கு Green Layer சுற்றுச்சூழல் அமைப்பினால் மேலும் அவர்கள் தொடர்ந்து மரநடுகையில் ஈடுபட வேண்டும் என்ற எண்ணத்துடன் நினைவுச்சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.