இந்த 5 ராசிக்காரங்க இன்னொரு காதலை தேடுவார்களாம். இவங்களுக்கு ஒரு காதல் பத்தாதாம்!

நம்பகத்தன்மை என்பது ஒரு ஆண் அல்லது பெண்ணின் மிகவும் கவர்ச்சிகரமான பண்புகளில் ஒன்றாக இருக்கலாம். ஆனால் நீண்ட கால உறவில் இருப்பவர்கள் பெரும்பாலும் இந்த காரணியை மறந்து விடுகிறார்கள். சலிப்பு அல்லது உறவில் தேக்கம் அவர்களை வேறொரு நபரை நாடுவதற்கு வழிவகுக்கிறது.

ஒரு உறவில் இருக்கும்போதே வெளிநபரை தேடிச்செல்லும் பண்பு அனைவருக்கும் பொதுவானதாக இருந்தாலும் சிலருக்கு அது அடிப்படை குணங்களில் ஒன்றாக இருக்கும். ஜோதிட சாஸ்திரத்தின் படி, சில ராசிகளில் பிறந்தவர்கள் இந்த குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். அவர்கள் யாரென்று இந்த பதிவில் பார்க்கலாம்.

தனுசு

தனுசு ராசிக்காரர்கள் மற்ற தனிநபர்கள், சக பணியாளர்கள் மற்றும் நண்பர்கள் அவர்கள் மீது வெளிப்படுத்தும் ஆர்வத்தில் இருந்து அவர்களின் சுய மதிப்பைப் பெறுகிறார்கள். எனவே, அவர்கள் ஒரு உறவில் இருந்தாலும் மற்றவர்களுடன் பேசுவதையோ, ஊர் சுற்றுவதையோத் தவிர்ப்பது கடினம். அவர்கள் அதை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லாவிட்டாலும், அவர்கள் இன்னும் ஒரு போட்டியாக விரும்பப்படுகிறார்கள் என்பதை அவர்கள் பெருமையாக நினைக்கிறார்கள். அவர்கள் மீது ஈர்ப்பு கொண்ட நபரை அறிந்து கொள்வதில் எந்த பிரச்சனையும் இல்லை, பெரும்பாலும் அவர்கள் நெருங்கிய நண்பர்களாக மாறுகிறார்கள்.

விருச்சிகம்

மிகவும் மர்மமான மற்றும் கணிக்க முடியாத ராசிகளில் ஒன்றான விருச்சிக ராசிக்காரர்கள் ஒரு உறவில் இருக்கும் போதே புதிய உறவைத் தேடுவதற்கு ஒருபோதும் தயங்க மாட்டார்கள். தங்களுக்கு எது மிகவும் பொருத்தமானது என்பதை அவர்கள் தீர்மானிக்கும் வரை, அவர்கள் தங்கள் உறவுகளின் எண்ணிக்கையை எந்தவித கவலையும் இல்லாமல் அதிகரித்துக் கொண்டே செல்வார்கள். இது அவர்களின் துணைக்கு அதிக கவலையையும், சிக்கலையும் ஏற்படுத்தும். விருச்சிக ராசிக்காரர்களை விரும்புபவர்களின் இதயம் நொறுங்குவது உறுதி.

மகரம்

இயற்கையாகவே அதிக ஆர்வமுள்ள ராசிகளில் ஒன்றாக அறியப்படும் இவர்கள் காதல் விவகாரங்களில் அதீத ஆர்வம் கொண்டவராக இருக்கிறார்கள். எனவே அவர்கள் ஒரு உறுதியான உறவில் இருக்கும்போது கூட, அவர்கள் மீது ஆர்வம் செலுத்தும் மற்றவர்கள் மீது அவர்கள் ஈடுபாடு காட்ட தயங்குவதில்லை. அதேசமயம் தங்களின் நிலையான உறவையும் அவர்கள் விடுவதில்லை. இது தற்போதயை காதலருக்கு சரி, புதிய காதலருக்கும் சரி சிக்கலான சிக்கனல்களை அளிக்கும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்கள் காதலிக்கவும், மகிழ்ச்சியாக இருக்கவுமே பிறந்த சுறுசுறுப்பான ராசியாகும். அவர்கள் வெறித்தனமாக காதலிப்பார்கள், ஆனால் அதேசமயம் வெளிநபர் ஒருவர் சிக்னல் கொடுத்தால் அதனை தொடர ஒருபோதும் தயங்க மாட்டார்கள். ரிஷப ராசிக்காரர்கள் அதன் ஆளும் கிரகமான சுக்கிரனிடம் இருந்து அற்புதமான காதல் திறமையைப் பெறுகிறார்கள். எனவே ஒன்றுக்கு மேற்பட்ட உறவை ஒரே நேரத்தில் சமாளிக்க இவர்களால் தாராளமாக முடியும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்கள் சந்தேகத்திற்கு இடமின்றி சிறப்பான காதலர்கள். ரிஷப ராசியைப் போலவே துலாம் ராசியும் சுக்கிரனால் ஆளப்படுகிறது. இது அவர்களுக்குள் காதல் உணர்வை பெருக்கெடுத்து ஓடச்செய்கிறது. ஆனால் இவர்கள் ஒரு உறவு அவர்களுக்கு பொருந்தாத உறவு என்று உணர்ந்த பின்னரே புது உறவில் ஈடுபடத் தயாராகுகிறார்கள். ஆனால் ஒரு உறவில் இருந்து அடுத்த உறவிற்குச் செல்ல உடனடியாக தயாராகி.விடுவார்கள்.


Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad