இந்தியாவை வீழ்த்தி இலங்கை திரில் வெற்றி.

ஆசிய கிண்ண ரி20 கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் இந்திய அணி​யை வீழ்த்தி 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியை வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது. 

அதனடிப்படையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்களை இழந்து 173 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. துடுப்பாட்டத்தில் இந்திய அணித்தலைவர் ரோஹித் சர்மா அதிகபட்சமாக 72 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். 

பந்துவீச்சில் இலங்கை அணி சார்ப்பில் தில்ஷான் மதுஷங்க 3 விக்கெட்களையும் சாமிக கருணாரத்ன மற்றும் தசுன் சானக ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தியிருந்தனர். அதனடிப்படையில் இலங்கை அணிக்கு 174 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 19.5 ஓவர்கள் நிறைவில் 174 ஓட்டங்களை அடுத்து போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. இலங்கை அணி சார்ப்பில் குசல் மென்டிஸ் 57 ஓட்டங்களையும், பெத்தும் நிஸ்ஸங்க 52 ஓட்டங்களையும் மற்றும் தசுன் ஷானக ஆட்டமிழக்காமல் 33 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.
Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad