யாழ்ப்பாணத்திலிருந்து தீவுப்பகுதிக்குச் செல்லும் பிரதான மார்க்கமான பண்ணைப் பாலத்தின் கீழ் பகுதி மற்றும் கோட்டைக்கு வெளியேயுள்ள பகுதிகளில் தொடர்ச்சியாக பல சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்படுகின்றனர் என யாழ். மாவட்ட செயலகக் கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
முனியப்பர் ஆலயத்துக்கு பின்புறமாகவும், கோட்டைக்கு வெளியேயும் உள்ள பகுதியிலேயே பாடசாலை சிறுமிகள் பலர் இவ்வாறு பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்படுகின்றனர்.
காதலர்கள் என்ற போர்வையில் அங்கு அழைத்துவரப்படும் சிறுமிகள் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்படுகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த சில மாதங்களாக பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும், பண்ணைப் பாலத்தின் கீழ்ப் பகுதியில் சிறுமிகள் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்படுகின்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பெற்றோர் தமது பிள்ளைகளின் செயற்பாடுகள் தொடர்பில் உன்னிப்பாக கவனிக்க வேண்டும் என்றும், பொலிஸார் இந்தப் பகுதிகளில் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்றும் யாழ். மாவட்ட செயலகக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீட்டிலிருந்து டியூஷன் செல்வதாக பெற்றோரிடம் தெரிவித்து வரும் பல சிறுமிகள் தங்கள் காதலனுடன் (சில சமயங்களில் காதலன்கள்) யாழ் கோட்டையில் உள்ள மறைவான பகுதிகளில் அந்தரங்க செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர். அது மட்டுமின்றி இவர்களை போதை பொருளுக்கு அடிமையாக்கி அவர்களை பல்வேறு தேவைகளுக்கு பயன்படுத்தும் நோக்கில் சிலர் செயட்படுகின்றனர். இனிவரும் காலங்களில் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களின் புகைப்படங்கள் காணொளிகள் கிடைக்கும் பட்சத்தில் தயக்கமின்றி வெளியிடுவோம். உங்கள் பிள்ளைகள் மீதும் அவதானத்துடன் இருங்கள் அன்பார்ந்த பெற்றோரே...அனைவரும் அறிய பகிருங்கள்.