யாழில் பல நூற்றுக்கணக்கான மாணவர்கள் போதைக்கு அடிமை!! நடப்பது என்ன?

அவசரமானதும் அவசியமானதுமான வேண்டுகோள். யாழ்பாணத்தில் போதைப்பொருளுக்கு அடிமையான பிள்ளைகளை தாய்மாரே பொலிஸ்நிலையத்தில் ஓப்படைக்கும் அவலம்!!

பல நூற்றுக்கணக்கான மாணவர்கள் போதைக்கு அடிமை!! நடப்பது என்ன?

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உயிர்கொல்லிப் போதைப்பொருளான ஹெரோய்ன் பயன்படுத்திய 10 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

இதற்கு அடிமையான 320 பேர் வரையில் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் மறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் யாழ். போதனா மருத்துவமனையில் ஹெரோய்னுக்கு அடிமையானவர்களுக்கு சிகிச்சையளிக்கும் நிலையம் திறக்கப்பட்டு இரண்டு மாதங்களுக்குள் 134 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மேலும், யாழ். மாவட்டத்தில் 20 கிராமங்களைச் சேர்ந்த பலரும் ஹெரோய்ன் பாவனைக்கு முற்றாக அடிமையாகியுள்ளனர் என்ற அதிர்ச்சி தகவலும் வெளிவந்துள்ளது.

ஹெரோய்னுக்கு அடிமையானவர்களில் அதிகமானோர் 18 – 23 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என்பதுடன், யாழ். நகரிலுள்ள பிரபல பாடசாலைகளின் மாணவர்களும் இதற்குப் பழக்கப்பட்டுள்ளனர் என்ற உண்மையும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

கொரோனா, பொருளாதார நெருக்கடி எனப் பல்வேறு அழுத்தங்களுக்கு மத்தியிலும் யாழ். குடாநாட்டில் உயிர் கொல்லிப் போதைப்பொருளான ஹெரோய்ன் பயன்பாடு பல்கிப் பெருகியுள்ளது.

கொழும்பிலிருந்து தொடர்ச்சியாக உயிர்கொல்லி ஹெரோய்ன் யாழ்ப்பாணத்துக்குக் கொண்டு வரப்படுகின்றது. இங்குள்ள பல நூற்றுக்கணக்கான முகவர்கள் ஊடாக அவை குடாநாட்டின் சகல பகுதிகளுக்கும் விநியோகிக்கப்படுகின்றன.

உயிர்கொல்லி ஹெரோய்னை ஊசி மூலமே அதிகளவானோர் பயன்படுத்துகின்றனர். ஒரு நாளைக்கு 30 மில்லி கிராம் தொடக்கம் 300 மில்லி கிராம் வரையில் நுகர்கின்றனர்.

தொடர்ச்சியாக யாழ்ப்பாணத்தில் அதிகரித்துச் செல்லும் இந்தப் போதைப் பொருள் பாவனையைக் கட்டுப்படுத்துவதற்கான முறையான வேலைத் திட்டத்தை முன்னெடுப்பதற்கு அரசியல் தலைவர்கள், மதத் தலைவர்கள், சிவில் சமூகத்தினர் முன்வரவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad