யாழில் மின்னல் தாக்கி இளைஞன் மரணம்.

யாழ்.தெல்லிப்பழை பகுதியில் மின்னல் தாக்கியதில் 34 வயதான இளைஞன் உயிரிழந்துள்ளார்.

இன்றைய தினம் வியாழக்கிழமை காலை உயிரிழந்துள்ளார். தெல்லிப்பளை கிழக்கை சேர்ந்த மகாலிங்கம் இராகவன் (வயது 34) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞன் அம்பனை பகுதியில் உள்ள தமது தோட்டத்தில் தேட்ட வேலையில் ஈடுபட்டிருந்த தந்தைக்கு உணவினை கொண்டு சென்றவேளை

தோட்ட பகுதியில் மின்னல் தாக்கி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. யாழ்.தெல்லிப்பளை காங்கேசன்துறை பகுதிகளில்

இன்றைய தினம் வியாழக்கிழமை காலை திடீரென கடும் மழை இடி மின்னலுடன் பெய்திருந்தது. இதன்போது மின்னல் தாக்கி குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளார்.

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad