படகு விபத்து - காணாமல் போன 03 சிறுமிகளில் ஒருவரின் சடலம் மீட்பு

சூரியவெவ மஹாவெலிகடஹார வாவியில் படகு கவிழ்ந்து காணாமல் போன மூன்று சிறுமிகளில் 10 வயது சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

18 மற்றும் 17 வயதுடைய காணாமல் போன ஏனைய இரு சிறுமிகளை மீட்கும் பணி தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த படகில் 8 பேர் பயணித்துள்ள நிலையில் அதில் 5 பேர் காப்பாற்றப்பட்டிருந்தனர்.

இதில் காப்பாற்றப்பட்ட 8 மாத குழந்தையின் நிலை கவலைக்கிடமாக இல்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவர்கள் குருநாகல் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் உறவினர் வீடு ஒன்றுக்கு வந்த நிலையில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மீன்பிடிக்க பயன்படுத்தப்படும் சிறிய படகில் 08 பேர் பயணித்ததால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். வாவியின் நடுப்பகுதியில் படகு கவிழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை லைக் செய்து உங்கள் ஆதரவை தாருங்கள்.

Below Post Ad