யாழில் உயிருடன் இருக்கும் மனைவிக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்த கணவன்! தாக்குதலுக்குள்ளான மகளும் தாயும் மீட்பு!!

யாழ்.தீவகம் ஊர்காவற்றுறை, கரம்பன் பகுதியில் தாய் உயிரிழந்துள்ளார் என்றும் 4 வயதான மகள் மீது தந்தை தாக்குதல் நடத்துக்கின்றார் என்கின்ற  காணொளி சமூக ஊடகங்களில் நேற்று முன்தினம் பகிரப்பட்டு வந்தது.

எனினும் குறித்த தாயும் மகளும் இன்றைய தினம் குடும்ப நல உத்தியோகத்தர்களால் மீட்கப்பட்டுள்ளனர். 

குறித்த பெண் வாய்பேச முடியாதவர் என்றும் அவர் கணவருடன் சென்றுள்ள நிலையில், அவரின் கண்ணீர் அஞ்சலி போஸ்டரும், குழந்தையைத் தாக்கும் காணொளியும் சமூக ஊடகங்களில் வெளியாகியிருந்தது.

இது தொடர்பில் விசாரணைளை மேற்கொண்ட பொதுச் சுகாதார வைத்தியர் குழு, இன்று காலை குறித்த தாயையும் மகளையும் மீட்டுள்ளனர்.

இன்று காலை திருகோணமலையிலிருந்து தப்பி வந்து யாழ்.பண்ணைப் பகுதியில் செய்வதறியாது நின்ற வேளையிலேயே அவர்கள் இருவரும் மீட்கப்பட்டுள்ளனர்.

தற்போது அவர்கள் சிறுவர் பாதுகாப்பு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டு, மருத்துவ பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுன்ளனர்.


Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad