கனடாவிற்கு கடலால் செல்லப்போகிறீர்களா? இந்த வீடியோ உங்களுக்குத்தான்.


கனடா செல்வதற்கான கப்பல் பாதையானது நாம் நினைப்பது போல் நயினாதீவு சென்று வருவது போல் அவ்வளவு இலகுவானதல்ல

இப்பூமியின் பெரும் சமுத்திரமும் ஆழ்கடலுமான பசுபிக்சமுத்திரத்தை கடந்து ஓரு மாதம் வரை பயணிக்கவேண்டும்

இப்போது மழைகாலம் ஆகையால் அடிக்கடி கடல்சீற்றம் கடற்புயல்கள் ஏற்பட்டு 100அடிக்கு மேல் அலைகள் எழும்

அதை விட இராட்சத திமிங்கிலங்கள் சுறாக்களின் வாழ்விடங்கள் இவையே அடிக்கடி ரோந்தில் திரியும்.

அக்கடலினில் பெரும் கொள்கலன் கப்பல்கள் பயணிப்பதே சவாலான விடயம். ஆனால் இவர்கள் சென்ற படகோ ஒருசிறிய மீன்பிடிப்படகு ஆகும் இது ஆழ்கடல் பயணங்களிற்கு உகந்ததல்ல அதனால் அக்கடலினில் 1000km தூரம் கூட தாண்டமுடியாது

ஆனால் அவர்கள் ஏதோ ஒருவகையில் இறைவனால் காப்பாற்றப்பட்டுள்ளார்கள் என்றே கூறவேண்டும்

அவர்கள் வெளிநாடு செல்ல முயன்றது பிழையல்ல தெரிவு செய்த முறைதான் பிழை.

அதற்காக அவர்களை கொச்சைப்படுத்துவதோ எள்ளிநகையாடுவதோ அழகல்ல.

இது போன்ற கடற்கொள்ளைக்கார்ர்களின் ஆசை வார்தைகளை நம்பி உங்கள் உறவுகளை உடமைகளை இழக்காதீர்கள்…

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை லைக் செய்து உங்கள் ஆதரவை தாருங்கள்.

Below Post Ad